Tuesday, December 18, 2007

ஹஜ் பயணங்கள் 2007அபூசாலிஹ்

ஒவ்வொரு முஸ்லிமின் ஐந்து கட்டாயக் கடமைகளில் இறுதிக்கடமையான ஹஜ்ஜை வழமைப் போல் ஹாஜிகள் நிறைவேற்றி முடித்திருக்கும் உன்னதமான வேளை இது. ஹாஜிகளை வரவேற்க ஒவ்வொரு முஹல்லாவும் இன்முகத்துடன் தயாராகும் வேளை.அதிக அளவில் பெண்கள் உலகம் முழுவதும் 187 நாடுகளில் இருந்து 25 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் ஹஜ் எனும் புனிதக்கடமையினை இவ்வாண்டு நிறைவேற்றியுள்ளனர்.
இதில் 50 சதவீதம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். உணர்ச்சி வெடிக்க கண்ணீர் பெருக்கெடுக்க தாய்மார்கள் ஹஜ் கடமையினை நிறைவேற்றியுள்ளனர். 130 கோடிக்கு மேல் ஒன்றுபட்ட ஓர் உன்னத சமூகத்தினர் நாடு, மொழி, பிராந்தியம் கடந்து ஒரே உணர்வுடன் இங்கே சங்கமித்த எண்ணும் போது ஏற்படும் உணர்ச்சிப் பெருக்கை வார்த்தைகளால் வடிக்க இயலாது என நெகிழ்கிறார் அலிகாரைச் சேர்ந்த சமிரா.
எதிரிகளுக்கும் பிரார்த்தனை
இஸ்லாம் இன்று அதைப் புரியாதவர்களால் தொடர்ந்து கருத்தியல் ரீதியாக தாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. உலக மக்கள் அனைவருக்கும் அவ்வாறு தாக்குபவர்களுக்கும் சேர்த்து, உலக அமைதிக்காகவும் தான் பிரார்த்திப்பதாக டொராண்டோவின் ரானா அஸ்கர் ஹுஸைன் கூறுகிறார்.
தீவிரவாதத்திற்கு இஸ்லாத்தில் சிறிதும் இடமில்லை. ஏனெனில் இஸ்லாம் ஒரு சுதந்திரமான மார்க்கமாகும். மனித நேயமே அதன் முக்கியக் குறிக்கோளாகும், நாம் இந்தப் பூமியிலிருந்து 'வெறுப்புணர்வு' என்ற வேண்டாத சொல்லை அகற்றுவோம். இஸ்லாமியக் கொள்கைகள், அதன் வழிமுறைகள் அனைத்தையும் அறிந்தவர்களுக்குத் தெரியும். இஸ்லாம் என்பது 'அன்பு' 'பொறுமை' போன்றவற்றின் மார்க்கமாகும் என்று நபிகள் பெருமானார்(ஸல்) அவர்களின் வாழ்வு அதற்கு சீரிய எடுத்துக்காட்டு ஆகும். இஸ்லாத்தைப் பற்றி தவறுதலான புரிந்து கொள்ளலில் முக்கியமானது முஸ்லிம்கள் பெண்களை சமமாக நடத்தவில்லை என்பதாகும்.
இஸ்லாத்தில் பெண்களுக்கு எந்த உரிமைக்குறைவும் ஏற்படவில்லை. பெண்கள் இங்கே பெருமிதத்துடனே வாழ்ந்து வருகிறோம் என்றார்.
ஒற்றுமைக்கு பிராத்தனை
மேற்குலகத்தினர் உள்நோக்கத்துடன் இஸ்லாத்தைப் பற்றி, குறை கூறுகின்றனர். அதை பொதுமைப்படுத்தவும் முயல்கின்றனர். ஆனால் ஹஜ் புனிதப் பயணத்தின் பிரார்த்தனையில் ஹாஜிகள் அனைவரும் முஸ்லிம்களின் ஒற்றுமைக்காகவும் உலக அமைதிக்காகவும் மனித குலத்துக்காகவே பிரார்த்தனை செய்து வருகின்றனர் என ஜோகன்னஸ் பர்க்கிலிருந்து வந்த ஹாஜிமா சுமையா சுலைமான் கூறுகிறார்.
முஸ்லிம்கள் அனைவரும் இஸ்லாத்தின் உயரிய மதிப்பீடுகளை உணர்ந்து பின்பற்றாததால் முஸ்லிம்கள் மீதான எதிர் மறையான கருத்தை பரப்ப காரணமாகி விட்டது என ஃபாத்திமா முஹம்மத் எனும் ஜோர்டானைச் சேர்ந்த ஹஜ் பயணி தெரிவித்தார்.
முஸ்லிம் பெண்கள் இஸ்லாத்தின் உன்னத செய்தியை உலகம் உணரும் வகையில் செயல்பட வேண்டும் என தனது எண்ணத்தை வெளிப்படுத்தினார் இந்தோனேஷியாவின் ஜாவாதீவுப் பகுதியைச் சேர்ந்த என்னாரு பீனா.
நாம் அனைவரும் பிற சமூகத்தினர் பின்பற்றும்படி இருக்க வேண்டும். உலகின் பார்வை அனைத்தும் நம்மீது படர்ந்திருக்கிறது என தெரிவித்த மொரிஷியஸைச் சேர்ந்த ஆசிரியை நதியா ரஹ்மான் 'நாம் நமது நேர்த்தியான வாழ்வியல் முறையின் மூலம் போல் அவர்களிடம் பதிலளிக்க வேண்டும்' என்றும் தெரிவித்தார்.
புனித மக்கா, மினா, அரஃபா, மதினா என அனைத்துப் பகுதிகளும் 12 லட்சத்திற்கு மேற்பட்ட முஸ்லிம் பெண்களால் திணறுகிறது.
அந்த ஆன்மீக வெள்ளைக்கடல் உலக சமாதானத்திற்காக பிரார்த்தனைகளை உள்ளம் உருக எல்லாம் வல்லவனிடம் வேண்டியது.
இந்தியாவிலிருந்து 1,50,000
இந்தியாவிலிருந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் சென்றனர். மகராஷ்ட்ராவிலிருந்து 108 வயதான மூதாட்டியும் ஜார்கண்ட் மாகாணத்தின் நான்கு வயதுச் சிறுமியும் புனித ஹஜ் பயணம் செல்கின்றனர்.
இந்தியாவில் ஹஜ் புனிதப் பயணம் மேற் கொண்டவர்களுக்கு பிரதமர் மன்மோகன்சிங் வாழ்த்து தெரிவித்தார்.
அதில் 'ஹஜ் புனிதப்பயணம் செல்லும் வாய்ப்பை பெற்றவர் இறைவனின் அருள் பெற்றவர் ஆவார். ஹஜ்ஜை நிறைவேற்றச் செல்லும் அனைத்து புனிதப் பயணிகளும் சமாதனத்துக்கும் ஒற்றுமைக்கும் நாட்டில் சமய நல்லிணக்கம் நிலவவும் பிரார்த்திக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார். இது இந்திய மக்கள் தான் அனைவரின் பிரார்தனையும் ஆகும் என்றும் குறிப்பிட்டார்.
இஸ்லாத்தின் செய்தி, சமாதானம் மற்றும் சகோதரத்துவம் என பிரணாப் முகர்ஜி குறிப்பிட்டார். இதை கோடிட்டுக்காட்டிய மன்மோகன்சிங் 'இஸ்லாம் நமது பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டு கடந்த குடியரசு தினத்தன்று நாம் பெருமையுடன் வரவேற்ற மன்னர் அப்துல்லாஹ்வின் மாட்சிமைக்கு நாங்கள் என்றும் நன்றியுடையவர்களாக இருப்போம்' என்றும் பிரதமர் ஹஜ் பயணிகளுக்கான வாழ்த்து செய்தியாக குறிப்பிட்டார். மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் அப்துர் ரஹ்மான் அந்துலே தலைமையில் இந்தியக் குழு சென்றது.
தவிப்பின் இடையே ஹஜ் கனவு நனவாகியது. (பாலஸ்தீனம்)
அடக்கு முறைகளால் நசுக்கப்பட்டுத் துன்பத்தில் உழலும் பாலஸ்தீன, மக்களுக்கும் ஹஜ் பயண வாய்ப்பு கிடைத்ததை எண்ணி பாலஸ்தீன காஸா பகுதி ஹாஜிகள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
இனவெறி இஸ்ரேலால் அடக்கி ஒடுக்கப்பட்ட பாலஸ்தீனம் உரிமைப் போரட்ட விவகாரத்தில் உறக்க நிலைசக்தியான ஃபதாஹ் கட்சியிடம் மாட்டித் தவித்த போது, உரிமைக்காக ஒங்கிக் குரல் கொடுத்த ஹமாஸின் கட்டுப்பாட்டிற்குள் பாலஸ்தீனம் வந்தது.
சொந்த சகோதரர்களின் தொடர் போரினால் அமைதி இழந்து தவித்தனர் பாலஸ்தீன மக்கள்.
எகிப்தின் எல்லைப் பகுதியான ரஃபாவின் அருகே காத்துக் கிடந்தனர். இஸ்ரேலின் கெடு பிடிகளையும் மீறி காத்துக் கிடந்தனர் பாலஸ்தீன மக்கள். எகிப்திய அரசு வருடத்திற்கொரு முறை காஸாப்பகுதி எல்லையை ஹாஜிகளுக்காக திறந்து விடுகிறது. இந்த ஆண்டு திறந்து விட தாமதமாகவே நவம்பர் 29 ஆம் தேதி பாலஸ்தீன மக்கள் கடும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து ரஃபா எல்லை திறந்து விடப்பட்டது.கடுமையான அழுத்தங்களுக்கும் போராட்டங்களுக்கும் பிறகும் இந்த ஆண்டு காஸா பகுதியில் 2,200 முஸ்லிம்கள் புனிதப் பயணம் சென்றனர்.
செர்பியர்களால் குதறப் பட்ட கொசோவாவில் 592 பேர் ஹஜ் புனிதப் பயணம் சென்றனர். இதில் 130 பேர் பெண்கள். 45 சதவீதத்திற்கு மேற்பட்ட மக்கள் இன்றும் வறுமைக் கோட்டிற்கு கீழான நிலையிலேயே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உழைப்பாளியின் ஹஜ்ஹஜ் பயணங்கள் குறித்த விவரங்கள் வெளிவரும் போது ஹஜ் பயணம் என்னும் இறுதி லட்சியத்தை நிறைவேற்றுவதற்காக செய்தது குறித்து கராச்சி அஹ்மத் இவ்வாறு குறிப்பிடுகிறார். எனது வாழ்நாள் கனவான ஹஜ்ஜை நிறைவேற்றியதை நான் பெறுதற்கரிய பாக்கியமாகக் கருதுகிறேன்.
'நான் புனித மக்கமா நகரத்தில் நுழைந்தபோது ஒட்டுமொத்த பூமியே என்னைப் பார்த்து புன்னகைப் போன்று இருந்தது எனக் கூறும் 46 வயது அஹ்மது கராச்சி பத்திரிக்கையாளர் சங்கத்தில் மின்சார தொழில்நுட்ப உதவியாளர். இவர் தனது இறுதிக் கடமையினை நிறைவேற்றுவதற்காக ஆண்டுகணக்காக 18 மணி நேரம் உழைத்தார். அதாவது வாழ்நாளில் 8 மணி நேரம் கூடுதலாக உழைத்தார். காலையில் 8 மணிக்கு வீட்டை விட்டு புறப்படும் அவர் மறுநாள் அதிகாலை இரண்டு மணிக்கு முன்பு வீடு திரும்பியதே இல்லை. அஹ்மத் மற்றும் அவரது மனைவிக்கு ஹஜ் செல்ல மூன்று லட்ச ரூபாய் ஆகும் என்பதை அறிந்தார். நான்கு மாதம் வரை அவர் தான் இந்த ஆண்டு ஹஜ் செல்வோம்' என்ற நம்பிக்கையில் இருக்க வில்லையாம். நான்கு மாதத்திற்கு முன்பு அவரிடம் வெறும் இரண்டு லட்சரூபாய் தான் இருந்ததாம். இது அவரது கடந்த பத்தாண்டுகள் உழைத்த உழைப்பின் சேமிப்பாகும்.
சரியாக மூன்று மாதத்திற்கு முன்பு அவருக்கு மின்துறை தொடர்பான பெரிய ஒப்பந்தம் ஒன்று கிடைத்தது. எழுபத்தைந்தாயிரம் ரூபாய் வருவாய் கிடைக்கும் ஒப்பந்தம் அது.
'நான் எனது ஹஜ் பயணத்திற்காகும் செலவுக்கான பணத்தை நான்கு தவணைகளாக செலுத்தினேன்' என கூறும் அவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் மனைவியும் உள்ளனர். தங்களது சின்னஞ் சிறிய சேமிப்புகளைக் கூட தங்களுக்கு உதவியதாக அவர் தெரிவித்தார். குழந்தைகள் மற்றும் மனைவியின் சேமிப்பாக 5 ஆயிரம் ரூபாய் கிடைத்தது. அவர் வேலைக்கு சேர்ந்தது முதல் 20 ஆண்டுகாலமாக ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காத அவரது பணி நேர்த்தியை பாராட்டி 20 ஆயிரம் ரூபாயை வழங்கி அவரது அலுவலகம் அவரை பாராட்டியது. இவை அனைத்தையும் ஹஜ் புனிதப் பயணத்திற்கான செலவாக எடுத்துக் கொண்ட அவரிடம் 'முஸ்லிம் சகோதரர்களுக்கு ஏதும் சொல்ல விரும்புகிறீர்களா?' எனக் கேட்டபோது ஒருபோதும் 'தாமதப் படுத்தாதீர்கள்' ஹஜ் கடமையை நிறைவேற்ற முனைந்தால் தாமதிக்க வேண்டாம். இறைவன் உங்களுக்கு அனைத்து வகையிலும் உதவி புரிவான்'' என்றார்.சைக்கிளில் ஹஜ்ஜுக்கு சென்ற பிரெஞ்சு மாணவர்.
முஸ்லிமின் கடமைகளில் இறுதிக் கடமையான ஹஜ்ஜை சைக்கிளில் சென்று நிறைவேற்றிய இளைஞரைப் பற்றிய பிரமிப்பூட்டும் செய்தியை நாட்டிங் ஹாம் ஈவ்னிங் போஸ்ட் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.
4,500 கிலோ மீட்டர் தூரத்தை சைக்கிளிலேயே கடந்து சென்று ஹஜ் செய்தவர் என்பது குறிப்பிடத் தக்கது. அவரைப் போன்றே இவரும் அதீத ஆர்வத்தினால் சைக்கிள் மூலம் ஹஜ் பயணம் சென்றார்.
முதலில் இவரது சைக்கிள் ஹஜ் பயண திட்டத்தை இவரது குடும்பத்தினரும் நண்பர்களும் ஏற்றுக்கொள்ள வில்லை. அதன் பின்னர் இவரது உறுதியைப் பார்த்து பிரான்ஸின் நாட்டிங்ஹாம் நகர பள்ளிவாசல்கள் அனைத்தும் இவருக்கு ஆதரவு வழங்கின.
ஆறு மாதங்கள் மேற்கொண்ட ஹஜ் பயணத்தில் உணவு அருந்துதல் மற்றும் உறங்குது மட்டும் மிகவும் சிரமமாக இருந்தது என சலீம் குறிப்பிட்டார். ஆனால் நான் இத்தகைய கடின அனுபவங்களை எதிர்பார்த்தேன். அதனால் எனக்கு இறையருளால் அவ்வளவு கடினமாகத் தோன்றவில்லை' என தெரிவித்தார்.
சலீமின் சைக்கிள் ஹஜ் பயணம் பிரான்ஸ், பெல்ஜியம், சுவிட்சர்லாந்து மற்றும் இத்தாலி நகரங்கள் வரை சென்றது. அதன் பிறகும் அவரது சைக்கிள் சென்றிருக்கும் ஆனால் நிலவழிப்பாதை மிகவும் தூரம் எனவே இத்தாலிக்குப் பிறகு அவர் கடல் மார்க்கமாக துருக்கி சென்றார். துருக்கி வந்தடைந்த பிறகு சிரியா மற்றும் ஜோர்டான் நாடுகளின் வழியாக சைக்கிள் பயணம் தொடர்ந்தது. டிசம்பர் 18 ஆம் தேதி சரியாக புனித மக்காவை வந்தடையும் வண்ணம் அவரது பயணம் அமைந்திருந்தது.
சலீம் வளரும் தலைமுறையினர்களுக்கான சிறந்த எடுத்துக் காட்டாக விளங்கும் இளைஞர் என நாட்டிங்ஹாமின் கரிமிய்யா கல்விக் கூடத்தின் நிறுவனர் டாக்டர் முஷாரஃப் ஹுஸைன் தெரிவிக்கிறார்.
சைக்கிளில் ஹஜ்ஜிற்கு போன முதியவர்
25 வயது பிரெஞ்சு மாணவர் சலீமின் சிலிர்க்க வைக்கும் சைக்கிள் ஹஜ்ஜைப் பற்றி பார்க்கும்போது, கடந்த ஆண்டு சைக்கிளிலேயே ஹஜ் பயணம் சென்று வந்த முதியவர் ஒருவரின் நெகிழ வைக்கும் ஹஜ் பயணம் நினைவுக்கு வருகிறது.13 நாடுகளைக் கடந்து சென்ற அந்த ஹஜ் பயணியின் பெயர் மஹ்மூத் ஆகும். ரஷ்யர்களின் மேலாதிக்கத்தை எதிர்த்து உரிமைக்குரல் எழுப்பும் செசன்யாவைச் சேர்ந்த அவர் கொடிய தேள்கள், விஷப்பாம்புகள், வெறுப்புணர்வு கொண்ட அமெரிக்க போர் வீரர்களைத் தாண்டித்தான் அவர் தனது ஆன்மீக லட்சியத்தை அடைந்திருந்தார்.
'இவை எதுவுமே என்னை பயமுறுத்த முடியாது. ஏனெனில் நான் வல்ல அல்லாஹ்வுக்கு மட்டுமே அஞ்சுபவன்' என புன்முறுவலுடன் தெரிவித்தார்.செசன்யா தலைநகர் க்ரோஸ்னியிலிருந்து புனித மக்கா வரை 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் எனினும் அவரது சொந்த ஊரிலிருந்து 1200 கிலோ மீட்டர் தூர கூடுதலாகும்.
'ஹஜ் பயணத்தை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும் என மஹ்மூத் விருப்பம் தெரிவித்த போது அவரது தாயார் அதற்கான பொருளாதார பலம் இல்லை என மனம் சோர்வடைந்து விடாதே. உன்னிடம் சைக்கிள் இருக்கிறதல்லவா?' எனக் கூறியதை கண்ணீருடன் நினைவு கூர்கிறார் மஹ்மூத்.
சைக்கிள் செயின் 11ம்; சைக்கிள் ட்யூப்பும் அவசரத்திற்கு உதவும் என்று எடுத்துச் சென்றார்.
இவர் அமெரிக்க ஆக்கிரமிப்பில் இருக்கும் ஈராக் வழியாகச் சென்றபோது அமெரிக்க ராணுவத்தினர் இவரிடம் மோசமாக நடந்து கொண்டனர். ரஷ்யப் பன்றியே என அழைத்து இவரது சைக்கிளை உடைத்துப் போட்டனர். 'நான் ரஷ்யப் பன்றி அல்ல. முஸ்லிம் அல்லாஹ்வின் அடிமை' என நிலம் அதிரக் கூறியிருக்கிறார். தன்னுடைய பாஸ்போர்ட்டையும் அமெரிக்க ராணுவ வீரர்கள் பறித்துக் கொண்டதோடு ஈராக்கின் வழியாகச் செல்லக் கூடாது என மிரட்டி விரட்டியும் விட்டனர். அதனைத் தொடர்ந்து ஈராக்கை சுற்றிச் சென்று ஈரான், ஆர்மீனியா, ஜார்ஜியா வழியாகவும் துருக்கி மற்றும் ஜோர்டான் வழியாக மக்கா சென்றார்.
இறுதிக் கடமையினை நிறைவேற்றி இறைவனின் ஆணையையும், அன்னையின் ஆசையையும் நிறைவேற்றிவிட்ட இந்த 63 வயது பெரியவரின் சைக்கிள் ஹஜ் நெகிழ்வூட்டுகிறதல்லவா?
இயற்கை சீற்றத்திலும் இறை கட்டளை மறவாத பங்களா தேஷ் மக்கள்
ஹஜ் பயணம் செல்வதில் மூன்றாவது இடம் வகிக்கும் பங்களாதேஷில் இவ்வாண்டு 46 ஆயிரம் பேர் ஹஜ் பயணம் செல்கின்றனர். கடந்த ஆண்டு 60 ஆயிரம் பேர் ஹஜ் பயணம் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு ரஷ்யாவில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு 26 ஆயிரம் பேர் புனித ஹஜ் பயணம் செல்கின்றனர் என்பது, குறிப்பிடத்தக்கது. தலைநகர் மாஸ்கோவில் மட்டும் குறைந்த பட்சம் 500 பேர் இவ்வாண்டு ஹஜ் பயணம் நிறைவேற்றினர்

Wednesday, November 7, 2007

பாகிஸ்தான் அருங்காட்சியகத்தில் ஜனநாயகம்
பாகிஸ்தானில் பெயரளவுக்கு இருந்த ஜனநாயகம் முற்றிலும் ஒழிக்கப்பட்டு அவசர நிலை பிரகடனம் செய்யப் பட்டிருக்கிறது. எதிர்ப்பவர்கள் எவரும் இன்றி அதிபர் தேர்தலில் முஷாரஃப் ஜனநாயக (?) முறையில் வெற்றி பெற்ற பின்னரும் கூட நடுங்கி நிதானம் இழந்து அவசர நிலை பிரகடனம் செய்துள்ளார்.பாகிஸ்தானுக்கு ஜனநாயகம் என்பது எட்டாக்கனியாக இருந்தது மேலும் எட்டாத உயரத்தில் போய் விட்டது.பாகிஸ்தான் என்றால் முஷாரஃப், பெனாசிர், நவாஸ்ஷரீஃப், அமெரிக்கா, தலிபான் ஆதரவாளர்கள் என்று கலவையான குழப்பம் என்ற நிலைமாறி பாகிஸ்தானில் மக்களின் ஜனநாயக விழிப்புணர்வு, நீதித்துறையின் சுறுசுறுப் பான செயல் பாடுகள் என மாறியதால் பழைய பாகிஸ்தானாக அது தற்போது இல்லை.மதரஸா மாணவர்களிடையே இஸ்லாமிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. ஆனால் அரசையே எதிர்க்கும் அளவிற்கு அவர்கள் சென்றனர்.இஸ்லாமிய நெறியை பரப்ப, புரிந்து கொள்ள அவர்கள் காட்டிய விவேகமற்ற வேகம் சர்ச்சைக்குள்ளாகி லால் மஸ்ஜி தில் நூற்றுக்கணக்கான மாணவர்களின் உயிரைக் குடித்தது.அரசும், மதரஸாக்களின் தலைமைப் பீடங்களும் நிதானம் இழந்து செயல் பட்டதின் விளைவு இரு தரப்புக்குமே தோல்வியாக முடிந்தது.நீதித்துறையின் சுறுசுறுப்பான செயல் பாடு பாகிஸ்தான் மக்களுக்கு மட்டுமின்றி சர்வதேச அளவிலும் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது.பாகிஸ்தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இஃப்திகார் சவுத்ரி, நீதியை நிலை நாட்டும் முகமாக அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். ஆடித்தான் போனார் அதிபர் முஷாரஃப்.பாகிஸ்தானின் மாற்றங்கள் ஏற்றங் களை நோக்கிச் சென்றாலும், தமது அதிகார வரம்புக்கு ஏமாற்றங்களையே பரிசாக அளிக்கும் என்பதை உணர்ந்து கொண்டார்.பெனாசிருடன் வைத்துக் கொண்ட ரகசிய அதிகார பகிர்வு குறித்த உறவும் கராச்சி குண்டு வெடிப்பு சத்தத்தில் மாயமாய் மறைந்து போனது.பாகிஸ்தானில் முஷாரஃபின் பிடி நழுவியதோடு இந்த துணைக் கண்டத் தில் அமெரிக்காவின் பிடி நழுவும் போக்கு நாளோருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகிறது.ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் கூட்டமைப்பில் ரஷ்யா, சீனா, உஸ்பெ கிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தாஜிகிஸ்தான் ஆகிய உறுப்பு நாடுகள் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தி இப்பிராந்தியத்தில் சீனாவும், ரஷ்யாவும் வலுப்பெறுவதை அமெரிக்கா வெளிப் படையாகக் கண்டு கொள்ளாதது போல் இருந்தாலும், உள்ளூர நடுக்கத்துடன் தன் கைவசம் உள்ள பாகிஸ்தானை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டு பாகிஸ்தானின் ஜனநாயகத்தின் குரல் வளையை நசுக்க மறைமுக காரண மாகவே மாறிவிட்டது.இந்தியாவில் அணு ஆற்றல் ஒப்பந்தத் தில் மறைமுக அழுத்தம் கொடுக்கும் அமெரிக்கா பாகிஸ்தானில் முஷாரஃபை கொம்பு சீவி விட்டிருக்கிறது விளைவு பாகிஸ்தான் ஜனநாயகம் அருங்காட்சி யகத்தில் வைக்கப்பட வேண்டிய ஒன்றாக மாறிவிட்டது.நாளை அது புதைபொருள் ஆராய்சிக் குரிய ஒன்றாக மாறக்கூடும்.பாகிஸ்தானின் ஒற்றைத் தனி மனிதராய் முஷாரஃப் விளங்குகிறார். அவருக்கு ஆத்மார்த்தமான நட்பாக அதிபர் புஷ் மட்டுமே விளங்குகிறார். ஜனநாயகம் என்பது இவர்கள் இருவரின் நட்பு மட்டும் அல்லவே!பாகிஸ்தான் இன்று எரிமலையாய் தகித்துக் கொண்டிருப்பதாகவே அங்கி ருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. எரிமலையின் மேலிருந்து மகுடி வாசிக்கும் முஷாரஃபை நினைத்தால் பரிதாபம் ஏற்படுகிறது
Posted by mannady at 2:01 PM 0 comments

குஜராத் இனப்படுகொலை கொந்தளிக்கும் கண்டனக் குரல்கள்
குஜராத் இனப்படுகொலை கொந்தளிக்கும் கண்டனக் குரல்கள்இந்துக்கள் இதுவரை இப்படி அறியப்படவில்லைலிரவிசங்கர் (இந்து ஆன்மீகத் தலைவர்)'வாழும் கலை' என்ற அமைப்பின் குருவாக அழைக்கப்படுபவரும் ஹிந்து சமயத்தின் மரியாதைக்குரிய ஆன்மீக சாமியாராக போற்றப்படுபவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், குஜராத் இனப்படுகொலைக் குற்றவாளிகளின் ஒப்புதல் வாக்கு மூலங்கள் குறித்த தெஹல்கா பதிவுகள் தம்மை கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளாகியதாகக் குறிப்பிட்டார்.''ஹிந்துக்கள் இத்தகைய கொடும் செயல்களை செய்பவர்களாக இதுவரை அறியப்படவில்லை'' என்ற அவர், கொலை செய்வதும் எரிப்பதும் ஹிந்து சமுதாயத்தின் இயல்பு அல்ல என்று அவர் தெரிவித்திருக்கிறார்.இந்து மதத்திலிருந்து நீக்க வேண்டும்லி சுவாமி அக்னிவேஷ் (இந்து ஆன்மீகத் தலைவர்)குஜராத் இனப்படுகொலையாளர்களை இந்து மதத்திலிருந்து தள்ளி வைக்க வேண்டும் என்று சர்வதர்ம சன்சாத் அமைப்பு (இந்து மத நாடாளுமன்றம்) வலியுறுத்தி உள்ளது. சமூக சேவகர் சுவாமி அக்னி வேஷ், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் போன்ற முக்கிய மதத் தலைவர்கள் இதில் அங்கம் வகிக்கின் றனர். 'ஹிந்து மதம் ஓர் அபாயம்' என்ற தவறான ஒரு கருத்துருவாக்கத்தை சுயநலத்துடன் செயல்படும் ஹிந்துத்துவ அரசியல் கிரிமினல்கள் உருவாக்கி விட்டதாகவும் நாகரீகம் முன்னேறிய சமூகத்தில் வாழும் நாம் இத்தகை யவர்களை தண்டிப்பதிலும் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என்றும் சுவாமி அக்னிவேஷ் கூறினார்.பிரதமர் இதற்கு பதில் சொல்லட்டும்லி அருந்ததிராய் (பிரபல எழுத்தாளர்)குஜராத்தில் முஸ்லிம்கள் மீதான இனப்படு கொலை என்பது மதவெறியைக் கிளப்பி மக்கள் வாக்குகளைப் பெறும் நோக்கத்துடனே நடந்த தாகும். ஏனெனில் அதற்கு முன் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மோடி அங்கு படுதோல்வி அடைந்திருந்தார்.குஜராத்தில் முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலை சில முக்கிய வினாக் களை எழுப்பியுள்ளது. குஜராத் இந்தியாவில் ஒரு அங்கம்தானா? இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் இந்தியச் சட்டங்கள் குஜராத் துக்குப் பொருந்தாதா? குஜராத்தில் தற்போது முஸ்லிம்கள் என்ன செய்து கொண்டு இருக்கின்றனர்.முன்பு அங்கிருந்தவர்கள் எல்லாம் எங்கே போய் விட்டார்கள்? எப்படி அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார் கள்? இக்கேள்விகளுக்கெல்லம் பிரதமர் பதில் சொல்லியாக வேண்டும்.இந்தியா என்ற உடலின் ஒரு பகுதி அழுகிப் போய் அது இப்போது உடல் முழுவதும் வேகமாக பரவிக் கொண்டி ருக்கிறது. பாசிசம் வந்து விட்டால் நான் இந்துவாக இருந்தாலும் அது தனக்கு உதவாது என்று புக்கர் பரிசு வென்ற எழுத்தாளர் அருந்ததி ராய் தெரிவித்திருக்கிறார்.லி தீஸ்தா செடல்வாட் (மனித உரிமைப் போராளிஇந்த தெஹல்கா பதிவுகளை ஆதாரமாக வைத்து மோடி உள்ளிட்ட சங்பரிவரத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய அரசியல் சாசன சட்டம் குஜராத்திற்குப் பொருந்தாதா?நியாய நெறி பற்றிப் பேச பாஜகவுக்கு அருகதை இல்லைலி பிரதமர் மன்மோகன்சிங்குஜராத் இனப்படுகொலை குறித்து நாடே அதிர்ச்சியில் ஆழ்ந்த போது குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு நற்சான்றிதழ் வழங்கினார் அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வானி. இத்தகைய சக்திகளுக்கு நீதி நெறிகளைப் பற்றிப் பேச தகுதி கிடையாது.பாஜக ஆட்சியில் நடந்த ஆக்ரா உச்சி மாநாடு குளறுபடிகளுக்கும் அந்நிய தீவிரவாதிகளின் ஊடுருவலின் போது மத்தியில் ஆட்சி செய்து கொண்டிருந்த இவர்களின் மத்திய ஆட்சி தூங்கிக் கொண்டிருந்தது என்றும் சூடாகக் கேட்டார்.மனிதத்தன்மையற்ற செயல் லி சோனியா காந்திகுஜராத்தில் நடைபெற்றவை மனித குல விரோதமானவை என காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி தெரிவித்திருக் கிறார். இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலையாளர்கள் தங்களது ஒப்புதல் வாக்குமூலங்களை தெஹல்கா பத்திரிகை வெளியிட்டதற்கு பின், முதன்முறையாக சோனியாகாந்தி தெரிவித்துள்ள கருத்து இது என்பது குறிப்பிடத்தக்கது.இந்திரா ஒருமைப்பாடு விருது வழங்கும் விழாவில் சோனியா காந்தி பேசினார். இந்திய சமூகமும் அனைத்து காங்கிரஸ்காரர்களும் இந்த தீமைகளை எதிர்த்துப் போராட வேண்டும் என்றும் சோனியா காந்தி தெரிவித்தார்.நாம் இந்த மதவாத சமூக விரோத சக்திகளை எதிர்த்துப் போராடாமல் இருப்பின் அத்தகைய சக்திகள் நமது மதசார்பின்மை கொள்கைக்கும் நாட்டின் மக்களாட்சி கட்டமைப்புக்கும் பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.இந்திரா காந்தி ஒருமைப்பாட்டுக்கான விருது பந்துக்வாலா மற்றும் ராம்புன்யானி இருவருக்கும் விருது வழங்கப்பட்டது.குஜராத் இனப்படுகொலை ஒட்டுமொத்த நாட்டிற்கே கேவலம் லி மாயாவதி21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலையான குஜராத் இனப்படு கொலை ஒட்டுமொத்த நாட்டுக்கே மிகப்பெரிய கேவலம் என்று உத்தரப் பிரதேச முதலமைச்சர் செல்வி மாயாவதி தெரிவித்திருக்கிறார்.2002ல் நிகழ்ந்த இனப்படுகொலை அனைத்துக்கும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறிய மாயாவதி தெஹல்கா வெளிப்படுத்திய உண்மைகளால் ஒரு மாநில அரசு உள்நோக்கத்துடன் செய்த படுகொலை களும், அதற்கு பாரதீய ஜனதா மற்றும் ஹிந்துத்துவ சக்திகள் ஈடுபடுத்தப்பட்ட விதமும் வெட்ட வெளிச்சமாகியுள்ளதாகவும் செல்வி மாயாவதி தெரிவித்திருக்கிறார்.மோடியையும், அத்வானியையும் உடனே கைது செய்ய வேண்டும்!பிரதமரிடம் கொந்தளித்தார் லாலுகுஜராத் இனப் படுகொலையாளர் பாசிஷ மோடியையும் அவரது செயலுக்கு வக்காலத்து வாங்கிய மத்திய உள்துறை அமைச்சராக இருந்த எல்.கே. அத்வானியையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என மத்திய ரயில்வே துறை அமைச்சரும் ராஷ்ட்ரிய ஜனதா தளக்கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.தெஹல்கா ஊடகத்தின் வாயிலாக வெளியான உண்மைகள் உலுக்கத் தொடங்கிடயுள்ள சூழலில் மதசார்பின் மையை கடைப் பிடிக்கும் நாகரீக அரசியல்வாதியும், நெஞ்சுரமும் மிக்க தலைவருமான லாலு பிரசாத் யாதவ் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து தனது குமுறலை வெளிப்படுத்திய தோடு தனது கோரிக்கையையும் வலியுறுத்தினார்.தெஹல்கா வெளியிட்ட வீடியோ பதிவுகளின் அடிப்படையில் நரேந்திர மோடியை இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் 302ன் படியும், இந்திய தண்டனைச் சட்டம் 120பி படியும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அத்வானியையும் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.குஜராத் படுகொலைகள் குறித்து மோடி மற்றும் சங்பரிவார் சக்திகளை நோக்கி எங்கள் விரல்கள் நீண்டபோது. நாங்கள் பொய்யுரைப்பதாக அவர்கள் கூறினர். ஆனால் இன்று பாபு பஜ்ரங்கியும், குஜராத் அரசு வழக்கறிஞர் அர்விந்த் பாண்டியாவும் ஒப்புக் கொண்டிருப்பது நாங்கள் ஏற்கெனவே கூறியது உண்மை தான் என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது என்றார்.ரயில்வே துறை கோத்ரா விபத்து குறித்து பானர்ஜி கமிஷனை அமைத்தது. அது தனது விசாரணை அறிக்கையின் முடிவில் கோத்ரா ரயில் எரிந்தது விபத்து தான் சதிச்செயலை அல்ல என்று தெரிவித்திருந்தது. இதைக் குறிப்பிட்ட லாலு, ''நாம் இதை அன்றே சொன்னோம். தெஹல்கா இரண்டாவது முறையாக நிருபித்துள்ளது'' என்றார்.இந்திய மக்களை பிளவுப்படுத்த பாப்ரி மஸ்ஜிதை நோக்கி ர(த்)த யாத்திரை நடத்திய அத்வானியை தடுத்து நிறுத்தி முதன் முறையாக கைது செய்தவர் லாலு என்பது குறிப்பிடத்தக்கது.இந்தக் குற்றச் செயல் ஒடுக்கப்பட வேண்டும் லி குல்தீப் நய்யார் பத்திரிக்கையாளர்அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்படுவது எப்படி ஒரு அல்ப சந்தோஷத்துக்குரிய விஷய மாக மாறி மோடிக்கு வாக்குகளை அதிகரிக்க உதவுகிறது? இது உண்மை என்றால் இந்த குற்றம் அடக்கி ஒடுக்கப்பட வேண்டும் என மூத்த பத்திரிக்கையாளர் குல்தீப் நய்யார் தெரிவித் துள்ளார்.தெஹல்கா புலனாய்வு: அரசியல் கட்சிகள் இதை செய்திருக்க வேண்டும்லிநீதியரசர் ராஜேந்திர சச்சார்குஜராத் மாநிலத்தில் மதவெறி பாசிச சக்திகளுக்கு எதிராக உறுதியான வகையில் அங்குள்ள அரசியல் கட்சிகள் போராடாதது வருத்தத்தை அளிக்கிறது. பல்வேறு ஊடகங்களும் குஜராத் முஸ்லிம் மக்கள் மீதான இனப்படு கொலைகளை வெளியுல கிற்கு கொண்டு வந்திருந்த போதிலும் அடிப்படையில் அங்குள் அரசியல் கட்சிகள் தான் அதைச் செய்திருக்க வேண்டும் என நீதியரசர் ராஜேந்தர் சச்சார் கூறியுள்ளார்
Posted by mannady at 2:01 PM 0 comments
Tuesday, November 6, 2007

இந்த நூற்றாண்டில் நிகழ்ந்த உலகத்தில் மிகப்பெரிய இனப்படுகொலையில் (குஜராத் 2002) ஈடுபட்ட கயவர்களின் முகத்திரையை தெஹல்கா
இந்த நூற்றாண்டில் நிகழ்ந்த உலகத்தில் மிகப்பெரிய இனப்படுகொலையில் (குஜராத் 2002) ஈடுபட்ட கயவர்களின் முகத்திரையை தெஹல்கா செய்தி ஏடு கிழித்தது. அதனைத் தொடர்ந்து குஜராத் முதல்வர், உள்துறை அமைச்சர், உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நாட்டின் முன்னணி மனித உரிமை அமைப்புகள்லிகுடியரசுத் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, தேர்தல் ஆணையம் மற்றும் இந்திய பிரதமர் ஆகியோருக்கு அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.2002ல் குஜராத்தில் முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலையில் முதலமைச்சர் நரேந்திரமோடி அன்றைய உள்துறை அமைச்சர் கோர்தன் ஜடாஃபியா, அன்றைய அகமதாபாத் காவல்துறை ஆணையர் பி.சி. பாண்டே முஸ்லிம்களை கூட்டுப் படுகொலை செய்யவும், அவர்களது சொத்துக்களை அழிக்கவும் திட்டமிட்டு சதி செய்ததை தெஹல்கா புலனாய்வு குழு சந்தேகமின்றி நிரூபித்துள்ளது. முதலமைச்சர், உள்துறை அமைச்சர் மற்றும் அவர்களது மொத்த நிர்வாகமும் இந்த இனப் படுகொலைகளுக்காக திட்டமிட்டது மட்டு மின்றி அவர்களை அழித்தது மட்டுமின்றி கொலை யாளிகள், கற்பழிப்புக் குற்றவாளிகள் அனைவருக்கும் பத்திரமாக மறைந்து வாழ்வதற்கும் உறுதி அளித்துள்ள னர்.மதசார்பற்ற கொள்கையின் அடிப்படை அம்சங் கள் கூட மீறப்பட்டன. மக்களின் வாழ்வு, சுதந்திரம், கண்ணியம் மற்றும் சொத்துக்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கும் அரசியல் சாசன பொறுப் புணர்வை துறந்தது மோடி அரசு. நீதித்துறையின் முழு இயக்கமும் கோத்ரா விஷயத்தில் கேள்விக் குறியாக்கப் பட்டது.2002 குஜராத் இனப்படுகொலையின் போது மொத்த மாநில நிர்வாகம் எவ்வாறு ஈடுபட்டது என்பது குறித்தும் குற்றவாளிகளின் ஒப்புதல் வாக்குமூலங்கள் தெஹல்கா ஒளிப்பதிவு கோர்வைகளாக வெளி வந்துள்ளன.அதில் 'குஜராத் மாநில அரசு வழக்கறிஞர் அர்விந்த் பாண்டியாவின் வாக்குமூலத்தில் முஸ்லிம் இனப்படு கொலை நாள் ஒவ்வொரு ஆண்டும் வெற்றிநாளாக கொண்டாடப் படவேண்டும் என்றும் ஒவ்வொரு நீதிபதியும் தன்னை தங்களது சேம்பருக்கே அழைத்து எனக்கு முழு அபிமானத்தையம் ஆதரவையும் தெரிவித்ததோடு, முழு ஒத்துழைப்பையும் தேவையான நேரத்தில் தருவதாகவும் நீதிபதிகள் தெரிவித்திருக் கிறார்கள். ஏனெனில் அடிப்படையில் அவர்கள் ஹிந்துக்கள் என்றும் அவர் மதவெறிக் கொப்பளிக்க தெரிவித்துள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.என்னை சிறையிலிருந்து வெளியே எடுப்பதற்காக நரேந்திரமோடி எனக்காக மூன்று முறை நீதிபதிகளை மாற்றினார் என பாபு பஜ்ரங்கி என்பவர் தெரிவித்துள்ள ஒப்புதலையும், பாஜக எம்.எல்.ஏ ஒருவர் மோடி தங்களுக்கு மூன்று நாட்கள் வழங்கியதாகவும் நீங்கள் எந்த வன்முறை வேண்டுமானாலும் செய்து கொள்ள லாம் என்று அனுமதி அளித்ததையும் குடியரசுத் தலைவரும், உச்சநீதிமன்றமும், கவனத்தில் கொள்ள வேண்டும்.நரேந்திரமோடியை உடனடியாக பதவி நீக்கம் செய்து குஜராத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை உடனடியாக அமுல்படுத்த வேண்டும்.ய் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் ரத்து செய்யப்பட வேண்டும். நடப்பு காலகட்டத்தில் குஜராத்தில் தேர்தல் நடத்த உகந்த சூழல் இல்லை.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் மேற்பார்வையின் கீழ் சிபிஐ விசாரணை மேற்கொண்டு பாரதீய ஜனதாவின் அரசியல் கட்சி ரத்து அங்கீகாரத்தை செய்ய தேர்தல் ஆணையம் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.தெஹல்கா பதிவுகளில் கொலையாளிகள் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில் அனைத்துக் குற்றவாளிகளையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்.ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி, பஜ்ரங்தள் மற்றும் சிவசேனா உள்ளிட்ட அமைப்புகளை சட்டவிரோத அமைப்புகள் என்று அறிவிக்க வேண்டும், தெஹல்கா ஒளிப்பதிவு ஆதாரங்களில், குற்றவாளிகள் தாங்கள் இத்தகைய அமைப்புகளின் முக்கிய தலைவர்கள் என்று பெருமையுடன் அறிவித்தார்கள். கொள்ளையடித்த திலும், குண்டுகள் உற்பத்தி செய்ததையும், ராக்கெட்டுகள் உற்பத்தி செய்ததையும் ஒப்புதல் வாக்குமூலமாக கூறியதன் அடிப்படையில் உச்சநீதி மன்ற மேற்பார்வையில் சி.பி.ஐ விசாரணை அமைக்கப் பட வேண்டும்.நான்டெடில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகள் மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற குண்டு வெடிப்புகள் குறித்து மறு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இதில் பெரிய அளவில் சங் பரிவார் சக்திகள் வெடிகுண்டுகள் தயாரித்து பிரத்தியேக பயிற்சி எடுத்து அப்பாவிகளைக் கொன்றதை தெஹல்கா ஒளிப்படப் பதிவுகள் உறுதி படுத்தியுள்ளன. எனவே நாட்டில் நடைபெற்றுவந்துள்ள சங்பரிவார் சதிகள் குறித்து விசாரணை செய்ய வேண்டும் இப்போதே
Posted by mannady at 5:39 PM 0 comments
Friday, November 2, 2007

குஜராத் முஸ்லிம்கள் அழிப்பு!
குஜராத் முஸ்லிம்கள் அழிப்பு! அம்பலப்படுத்தியது தெஹல்கா புலனாய்வுக்குழுஅபூசாலிஹ்உலகம் தோன்றிய நாள் முதல் மனித உருவில் அலையும் மிருகங்கள் வந்திருக்கிறார்கள். மனிதர்களைப் போலவே அவர்களது அன்றாட நடவடிக்கைகள் இருந்தாலும் அவர்களது எண்ணத்தாலும் செயலாலும் ரத்தம் குடிக்கும் கொடிய மிருகங்களை விட மோசமாகவே நடந்து கொண்டார்கள்.நாகரீகம் வளர வளர மனித உருவில் நடமாடும் மிருகங்களின் உணர்வுகள் கட்டுப்படுத்தப்பட்டு, இத்தகையப் பிறவிகளால் பொது மக்களுக்கு ஆபத்து குறைய தொடங்கியது.தனிமனிதர்களாக இருந்து மனித இரத்தத்தை சுவைத்தால் அடையாளம் காணப்படுவோம் சட்டத்தின் பிடியில் சுலபமாக சிக்கிக் கொள்வோம். தப்புவதற்கு வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும் என்பதற்காக சக மனித உயிர்களை துன்புறுத்தி இன்பம் காண்பதற்காகவே 'இனவெறிக் கொள்கை கள்' உருவாக்கப்பட்டன.ஜெர்மனி ஹிட்லரின் நாசிசமும், இத்தாலியின் பாசிசமும், இந்தியாவில் ஜனித்த ஹிந்துத்துவமும் இத்தகைய ரகத்தை சேர்ந்தவைகள் தான்.இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு இனப்படுகொலைகளை நிகழ்த்திய நாசிச பாசிச சக்திகள் கடுமையாக தண்டிக்கப்பட்டன. மனித உரிமைக் கொள்கைகள் எழுச்சி பெற்றன. தனி மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டது.சுதந்திரம் பெற்ற இந்தியா தனது குடிமக்கள் அனைவருக்கும் பாதுகாப் பையும் நிம்மதியையும் உறுதிப்படுத்த வேண்டிய கடுமையான சவால் நிறைந்த பணியை நிறைவேற்றும் வேளையில், எப்படி மனித குல விரோத 'சங்பரிவார்' சக்திகளின் மீதான கண்காணிப்பை கோட்டை விட்டார்கள் என்று உலகம் முழுவதும் உள்ள நடுநிலையாளர்களின் மனதில் தற்போது கேள்விகள் எழுகின்றன.அறுபது ஆண்டுகளாக நாட்டில்நிகழ்ந்த ரத்தக்கறை படிந்த (காந்தி கொலை தொடங்கி) சம்பவங்களில் கடுமையான குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்ட நிலையிலும் அவர்கள் மீதான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுப்பதில் ஏன் அலட்சியம்?கோத்ரா என்ற இடத்தில் நடை பெற்ற ரயில் பெட்டி விபத்து நடந்த சில மணி நேரங்களில் எவ்வாறு பாசிசவாதி கள் ஒருங்கிணைகிறார்கள். கச்சிதமாக திட்டமிடப்படுகிறது. முஸ்லிம்களின் உயிர்கள், முஸ்லிம் பெண்களின் மானம், அவர்களது பொருளாதாரம் எப்படி திட்டமிட்டு சூறையாடப்படுகிறது. அப்பாவிகளின் உயிர்களைக் குடிக்க வெறித்தனமாய் அலைந்த அந்த வெறி நாய்களை உருவாக்கிய அமைப்புகள், பிணங்கள் விழுந்து கொண்டிருக்கும் போதும் ராணுவத்தை அனுப்ப மறுத்த ஒரு மத்திய அரசு, குதறப்பட்ட மக்களின் கதறல்களையெல்லாம் ஆணவக்காரர் களின் வெறிக்கூச்சலால் வெளியே கேட்காமலேயே போய்விட்டது. சொந்த நாட்டிலேயே அகதிகளாய் பல்லாயிரக் கணக்கான முஸ்லிம்கள்.... அது ஆயிற்று ஐந்து ஆண்டுகாலம்.21லிம் நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலையை நிகழ்த்திய பயங்கரவாதிகள் பாதுகாப்புடன் உலா வருகிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்களைப் பார்த்து நாக்கை வெட்டு, தலையை வெட்டு என்று நரித்தனமாக ஊளையிடுகிறார்கள். இந்தியாவின் ஒவ்வொரு சதுர அடி நிலத்தையும் குஜராத்தாக மாற்றுவோம் எனக் கொக்கரிக்கிறார்கள்.தாங்கள் செய்த படுகொலைகளை தாங்களே ஆண்டு கொண்டிருப்பதால் மறைத்தார்கள்.இந்திய நாட்டை தலைகுனியச் செய்த இந்த நூற்றாண்டின் இனப்படு கொலையாளர்கள் எவ்வாறு அதைச் செய்தார்கள். எவ்வாறு சட்டத்தை மீறினார்கள். யாருடைய துணிச்சலில் இதைச் செய்தார்கள் என்பது குறித்து இந்தியத் திருநாட்டின் பெரும்பாலான ஊடகங்களுக்கு அக்கறையில்லை.உலகை உலுக்கிய அந்த உண்மை களை வெளிக்கொண்டு வர, கடும் ஆயுதங்களுடன் நடமாடிய அந்த மனித மிருகங்களிடம் இருந்து உண்மையை வரவழைக்க ஆறு மாதங் கள் கடினமாக உழைத்து 'சங்பரிவார்' குறித்த மேற்படிப்பு ஆராய்சிக்காக வந்திருக்கிறோம் எனக்கூறி சங்பரிவார் கிரிமினல்களை நோக்கி தெஹல்கா புலனாய்வு பத்திரிகையாளர்கள் புறப்பட்ட னர்.படுபயங்கர ஆயுதங்களையும் அதை விட பயங்கர நச்சு சிந்தனை களையும் கொண்ட சங் பரிவார் பயங்கரவாதிகளை சட்டைப் பட்டன் அளவே உடைய இரண்டு கேமராக் களுடன் சந்தித்தனர்.அனைவருக்கும் தெரியும் 2002ல் நடந்த சதிகளின் பின்னணியில் இருந்தவர்கள் யார்? யார்? என்ற விவரம். ஆனால் இப்போது அவர்கள் என்ன சொல்கிறார்கள்? செய்ததற்கு வருந்து கிறார்களா? அல்லது தாங்கள் செய்த குற்றச் செயல்களுக்கு யார் மீதாவது பழி போடுகிறார்களா? என்பதையெல்லாம் அறிவதற்காக அந்த நெஞ்சுரம் கொண்ட புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் புறப்பட்டுச் சென்றார்கள்.அந்தக் கொடியவர்கள் வாய் திறந்தார்கள். இதயம் உள்ளவர்கள் அனைவரும் வாய்மூட வேண்டிய நிலை ஏற்பட்டது.''இந்தப் புலனாய்வில் காவல்துறை நீதித்துறை என்ற தூண்களுக்கு நடுவில் சராசரி இந்தியன் நிர்வாணமாக நிற்பதைப் போன்ற ஒரு நிலை ஏற்பட்டது'' என தெஹல்கா பத்திரிகையின் செய்தி ஆசிரியர் சகோதரி ஹரிந்தர் பவேஜா தெரிவித்தார்.இரண்டு அரசு வழக்கறிஞர்கள் தங்கள் தொழில் தர்மத்துக்கு விரோதமாக கொடும் குற்றவாளிகள் தப்புவதற்கு உதவியதையும் குற்றவாளிகளின் தரகர் களாவும் செயல்பட்டனர். சட்டத்துறையே பணத்துக்காகவும், இனவெறிக்காவும் அப்பாவிகளின் உடல்களை கூறுபோடும் கொடு வாட்களாக மாறின.அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் அப்பாவி மக்களுக்கு தீங்கிழைக்கப்பட்டது. குஜராத் அரசு அமைத்த நானாவதி ஷா கமிஷன் ஐந்து ஆண்டுகாலம் ஆகியும் உண்மை நிலையை கண்டறியும் முயற்சியில் இறங்கவேயில்லை.காவல்துறை மறுசீரமைக்க வேண்டும்; இது அவசியமான ஒன்று என புலனாய்வுக்குழு தெரிவிக்கிறது. பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான அப்பாவிகள் இனப்படுகொலையை நேரில் கண்ட சாட்சிகள். நீதி என்பது குஜராத்துக்கு வெளியில்தான் கிடைக்கும் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக் கிறார்கள். நீதித்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது இந்திய தேசத்தின் இழிவு. இந்த இழிவை நீக்க ஒவ்வொரு இந்தியனும் போராட வேண்டும்.இனப்படுகொலைகள் நிகழ்ந்து ஐந்து ஆண்டுகள் கழிந்து விட்டன. இது குறித்து பாதிக்கப்பட்டவர்களின், அரசாங்கத்தின், காவல்துறையின், நீதித்துறையின், மனித உரிமை அமைப்புகளின் கருத்துக்களை இதுநாள் வரை கேட்டறிந்துள்ளோம்.இனி தெஹல்காவின் சிறப்பு செய்தியாளர் ஆசிஸ்கெதானின் வேதனைக்குரிய ஆறு மாத காலம் நீட்டித்த புலனாய்வின் மூலம் குற்றவாளி களின் வாக்குமூலங்களை நாம் கண்டறியப் போகிறோம்.ஜெர்மனியைப் போன்று, இத்தாலியைப் போன்று குஜராத்திலும் எவ்வாறு திடீரென்று பெருங்கூட்டம் ரத்த வெறி பிடித்து அலையும் கூட்டமாக மாறுகிறது.ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டு களுக்குப் பிறகும் காங்கிரஸ் அரசு இந்த பாதகர்களின் செயல்கள் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையே ஏன்?இதைப்போன்ற விடை தெரியாத கேள்விகள் நம்முன் விஸ்வரூப மெடுக்கின்றன.மனிதகுல விரோதிகள் ஒவ்வொரு வரின் வாக்கு மூலங்களையும் படிக்கும் போது உங்களுக்கு பல சொற்றொடர் களுக்கு உங்களுக்கு பொருள் புரியத் தொடங்கும்.• ஹிந்துத்துவ பயங்கரவாதம் உலகின் மிக மோசமான பாசிசவாதம்.• காட்டுமிராண்டித்தனம் என்பது இது தான்.• இதயம் இரண்டாக நொறுங்கி இரத்தம் சொட்டுவது போன்ற உணர்வு என்றால் இதுதானா?உங்கள் நினைவு அடுக்குகளில் ஏறிக்கொண்டு இனி எப்போதுமே கேள்விகளை எழுப்பி இம்சிக்கும் விவரங்களை படிக்கத் தொடங்குங்கள்
Posted by mannady at 10:08 PM 2 comments

பெட்ரோல் டேங்கரால் பள்ளிவாசலை நொறுக்கினோம்...
பெட்ரோல் டேங்கரால் பள்ளிவாசலை நொறுக்கினோம்... பிரகாஷ் ரத்தோட் & சுரேஷ் ரிச்சர்ட்நரோடா பாட்டியாவில் சங்பரிவார் கலவரங்களை தாங்கள் நினைத்தபடி நடத்தி தங்களது(?) திறமையை நிரூபித் தனர். பிரகாஷ் ரத்தோட் மற்றும் சுரேஷ் ரிச்சர்ட் என்ற இரண்டு காவி தீவிரவாதி களும் ஒப்புதல் வாக்குமூலத்தை ஆகஸ்ட் 12, 2007 அன்று அளித்தனர்.தெஹல்கா: பாட்டியா சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இன்னும் சிறையில் இருக்கிறார்களா?ரத்தோட்: இல்லை. பிபின் வெளியே வந்து விட்டார். சசிகாந்த் என்ற டுனியா மட்டுமே உள்ளே இருக்கிறார்.தெஹல்கா: பிபின் எங்கே இருக்கிறார்?ரத்தோட்: எப்போதும் கிருஷ்ணா நகரில் இருப்பார். ஆனால் யாருக்கும் தெரியாது.தெஹல்கா: அவர் அந்த நேரமும் அங்குதான் இருந்தாரா?ரத்தோட்: அவர் மட்டுமில்லை. எல்லா பையன்களும் அங்குதான் இருந்தார்கள். அவர் எல்லோருக்கும் சாமான் (ஆயுதங்கள்) விநியோகித்தார்.தெஹல்கா: வாள்கள் போன்ற வையா?ரத்தோட்: இல்லை. இல்லை. சிலருக்கு வாட்கள் மற்றும் திரிசூலங்கள் வழங்கப்பட்டன. சுரேஷ் ரிச்சர்டை தெரியுமா? அவரை சந்தியுங்கள். துப்பாக்கியைத் தவிர எல்லா ஆயுதங் களையும் அவர் வைத்திருந்தார்.தெஹல்கா: இது போதுமா விநியோகிக்க?ரத்தோட்: குட்டா என்று ஒரு மனிதன் சிறையில் இருக்கிறார். அவர் பரோலில் வெளிவந்த போது ஓடி விட்டார். அவர் ஏராளமான பேரைக் கொன்றிருக்கிறார்.தெஹல்கா: பிபின் அப்போது எங்கிருந்தார்?ரத்தோட்: நாங்கள் முதலில் அவர்களை சிதறடித்தோம். பிபின் பஞ்சாபிடம் வந்தோம். ஏராளமான பேர் அவர்களோடு இருந்தார்கள். நாங்கள் நுழையும் போதே அவர்கள் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் என்றே கோஷம் போட்டுக் கொண்டு இருந்தார்கள். அவர்களுக்கு (முஸ்லிம்களுக்கு) நாம் கற்பித்து கொடுக்க வேண்டிய பாடத்தை தொடங்கி விட்டோம். நெருப்பு எரியத் தொடங்கி விட்டது. முஸ்லிம்களை இழுத்து வரச் சொன்னோம்.தெஹல்கா: முஸ்லிம்கள்?ரத்தோட்: பின்னர் நாங்கள் அவர்களை அடித்தோம். அவர்கள் ஓடத் தொடங்கினார்கள். அவர்களில் ஒன்று அல்லது இரண்டு பேரை நெருப்பில் தூக்கிப் போட்டோம்.தெஹல்கா: சுரேஷ் ரிச்சர்ட் என்பவர் அந்தக் கூட்டத்தில் உண்டா?ரத்தோட்: அவர் மிக நன்றாக சண்டை போடுவார். குட்டா, நரேஷ் சரா, இந்த மூன்று பேரையும் பார்த்துமுஸ்லிம்கள் பயப்பட ஆரம்பித்தார்கள். ஏன் போலீஸ்காரர்களுக்கு கூட இவர்கள் மூவரைக் கண்டால் நடுக்கம் தான்.தெஹல்கா: மோடி வந்தாரா?ரிச்சர்ட்: கூட்டமாக அவர்களைக் கொன்று முடித்த அன்று மாலை 7.30 மணி இருக்கும் மோடி வந்தார். ரோஜா மாலைகளை எனது சகோதரிகள் மோடிக்கு அணிவித்தனர்.தெஹல்கா: நரேந்திர மோடியா வந்தார்.ரிச்சர்ட்: ஆமாம். நரேந்திர மோடி தனது கறுப்பு பூனைப் படைகளுடன் வந்திருந்தார். அவரது அம்பாசிடர் காரிலிருந்து இங்கு தான் இறங்கினார். என்னுடைய எல்லா சகோதரிகளும் அவருக்கு ரோஜா மாலைகள் அணி வித்தனர். பெரிய மனுஷன். ரொம்பப் பெரிய மனுஷன்.தெஹல்கா: அவர் சாலையைக் தாண்டி வந்தாரா?ரிச்சர்ட்: இங்குதான் அவர் வந்து போனார். நரோடாவில் என்ன நடந்தது என்பதைப் பார்க்க அவர் வந்திருக்கிறார்.தெஹல்கா: அன்று தான் நரோடா சம்பவங்கள் நடந்தன இல்லையா?ரிச்சர்ட்: அந்த மாலை நேரத்தில் தான்.தெஹல்கா: அவர் வந்தது ஐந்து மணிக்கா? ஏழு மணிக்கா?ரிச்சர்ட்: பிப்ரவரி 28 ஆம் தேதியன்று ஏழு மணியிலிருந்து ஏழரை மணிக்குள் மோடி வந்தார். நம்முடைய ஆதிவாசிகள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்றார். மோடி வந்த ஏழரை மணிக்கு மின்சாரம் இல்லை. எல்லாமே கலவரங் களால் சாம்பலாகிவிட்டன.(மேலும் தொடர்கிறார் ரிச்சர்ட்)ரிச்சர்ட்: நாங்கள் அனைத்தையும் கொளுத்தி முடித்து விட்டு திரும்பினோம். நாங்கள் களைப்படைந்து விட்டோம். பேட்டரிகள் எரிந்து கொண்டிருந்தன. கேஸ் சிலிண்டர்களும் எரிந்து கொண்டி ருந்தன. சில பன்றிகள் எங்களுடைய ட்ரக்குகளில் தூங்கிக் கொண்டிருந்தன. நாங்கள் பன்றிகளைக் கொன்றோம். நாங்கள் நான்கைந்து பேராகவே பல பன்றிகளைக் கொண்டு வந்தோம். பின்னர் அந்தப் பன்றிகளை பள்ளிவாசல் களில் தொங்கவிடப்பட்டன. பன்றி களுக்கு மேல் பள்ளிவாசல்களில் காவிக் கொடிகளை பறக்க விட்டோம். நாங்கள் பள்ளிவாசல்களை நொறுக்க முயற்சித் தோம். ஆனால் அவை எளிதில் உடைய வில்லை. டாங்கர் ஒன்று எங்கள் சகோதரர்களில் ஒருவர் தந்தார். பெட்ரோல் நிரப்பிய டேங்கரால் மோதச் செய்தோம். மிகவும் சிரமப்பட்டுதான் பள்ளிவாசலை நொறுக்கினோம்.தெஹல்கா: கற்பழிப்புகள் நடந்த தாகச் சொல்கிறார்களே?ரிச்சர்ட்: இங்க பாருங்க. நாங்க ஒன்றும் பொய் சொல்லவில்லை. எங்கள் அம்மன் சத்தியமா சொல்றேன் (பக்கத்தில் சாமி படம் இருக்கிறது) ஏராளமான முஸ்லிம் பெண்கள் கொல்லப்பட்டு கொளுத்தப்பட்டு வீசப்பட்டனர். எங்களது ஹிந்து சகோதரர்கள். வி.எச்.பி தோழர்கள், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் எல்லோரும் சேர்ந்து முஸ்லிம் பெண்களை சுவைத்தோம். என் மனைவி அருகில் இருக்கிறாள். இருந்தாலும் சொல்கிறேன். பழங்களைப் போல இருந்த அவர்களை முழுக்கச் சாப்பிட்டோம். நன்றாக சுவைத்தோம். நான் ஒரு தடவை அந்தப் பழத்தினை சுவைத்தேன்.தெஹல்கா: ஒரு தடவை தானா?ரிச்சர்ட்: ஒரு தடவை தான். பின்னர் நான் கொல்ல புறப்பட்டு விட்டேன். (உடனே திரும்பிப் பார்த்து தனது உறவினர் பிரகாஷ் ரத்தோட் தான் பாலியல் வன்முறை செய்து கொலை செய்த பெண்ணைப் பற்றி பேசுகிறார்.) ஸ்கார்ப் டீலரின் பொண்ணு நஸீமா பழரசம் போலவே இருந்தாள். இருப்பதிலேயே டாப் ஆக இருந்த அவளை எடுத்துக் கொண்டேன்.தெஹல்கா: நீங்கள் இருப்பதி லேயே டாப் ஆக இருப்பதை எடுத்துக் கொண்டீர்களா?ரிச்சர்ட்: ஆமாம்.தெஹல்கா: அவர் உயிரோடு இருக்கிறாளா?ரிச்சர்ட்: இல்லை.மேலும் தொடருகிறான்.ரிச்சர்ட்: 'நீங்கள் குழந்தைகளை வைத்திருந்தால் அவைகளை நான் நெருப்பில் எறிந்து விடுவேன். உங்கள் ஆன்மா கொளுத்தப்படும்' என்றேன். உயிர் பிழைத்தவர்கள் சிலர் தங்களது நெற்றியில் பொட்டு வைத்துக் கொண்டு குடிசைகளில் மறைந்து கொண்டனர். ஜெய் ஸ்ரீராம் என்று கூறிக் கொண்டு ஒரு கூட்டம் கோஷமிட்டது. ஆனால் அவர்கள் எந்த சமூகம் என்பதை அறிந்து கொண்டோம். பின்னர் நாங்கள் அவர்களை கொன்றோம். ஆர்.எஸ்.எஸ். மற்றும் பஜ்ரங்தள்காரர் அவர்கள் எப்படி மாறினாலும் அவர்களைக் கொல்லு வார்கள். அவர்களை குறித்து வைத்துக் கொண்டு கொல்லுங்கள் என்றார்
Posted by mannady at 10:08 PM 0 comments

நாங்கள் இங்கே ராக்கெட் லாஞ்சர்களை உருவாக்கி வைத்திருக்கிறோம்
நாங்கள் இங்கே ராக்கெட் லாஞ்சர்களை உருவாக்கி வைத்திருக்கிறோம்கோத்ரா எம்.எல்.ஏ. ஹரிஷ்பட்2002ல் குஜராத் கலவரங்களில் 2500 முஸ்லிம்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். அவர்கள் கொல்லப் பட்டது சாதாரண ஆயுதங் களால் அல்ல. பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கியிருக்கின்றனர் காவி பயங்கர வாதிகள்.இது கோத்ராவின் எம்.எல்.ஏ ஹரிஷ்பட்டின் வாக்குமூலத்திலிருந்து தெரிய வருகிறது.தனது பட்டாசு தொழிற்சாலையில் வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டு குஜராத் மாநிலம் முழுவதும் அனுப்பி, முஸ்லிம் களை மேல் உலகத்துக்கு அனுப்பிய தாகக் கூறியிருக்கிறார்.2007 ஜூன் ஒன்றாம் தேதி எடுக்கப்பட்ட பேட்டி.ஹரிஷ்பட்: லத்தியெல்லாம் தூக்கிப் போட்டு விட்டு துப்பாக்கி மூலமே அவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று ஆயுதப் பயிற்சி தொடங்கினேன். பஜ்ரங் தளத்தின் உறுப்பினர்கள் ஆயுதப் பயிற்சியில் சேர்ந்தனர். இந்தியாவில் முதன்முதலில் ஹிந்துத்துவ ஆயுதப் பயிற்சி முகாமைத் தொடங்கியவன் நான் தான். ஏழு பேர்களுடன் 1987ல் தொடங்கி னேன்.தெஹல்கா: 1987லேயே?ஹரிஷ்பட்: ஆமாம். 87ல் தான். அந்த (பாப்ரி மஸ்ஜித்) இடிப்புக்கு கூட நான் பயிற்சி கொடுத்து அனுப்பினேன். நாற்பது பேருக்கு பறிற்சி கொடுத்தது நான் தான். அருகிலுள்ள சர்கெஜ் பகுதியில் பஜ்ரங்தள்காரர்களுக்கு நாங்கள் ஆயுதப் பறிற்சி கொடுத்தோம். ராஜேஷ் பைலட் கூட நாடாளுமன்றத்தில் பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பிற்காக சர்கஜியிலிருந்து பயிற்சி கொடுக்கப்பட்டிருக்கிறது என்றார்.தெஹல்கா : பாப்ரி மஸ்ஜித் குறித்தா சொல்கிறீர்கள்?ஹரிஷ்பட்: ஆமாம். பாப்ரி மஸ்ஜிதை இடிப்பதற்காக அஹ்மதாபாத் அருகிலுள்ள சர்கேஜியிலிருந்து பயிற்சி கொடுக்கப்பட்டது.தெஹல்கா: பைலட் இந்த வினா வினை எழுப்பினாரா?.ஹரிஷ்பட்: சி.பி.ஜ விசாரணை கூட வந்தது, போனது.தெஹல்கா: உங்களுக்கு எதிராகவா?ஹரிஷ்பட்: தூண்டிவிட்டவர் களுக்கு எதிராக.தெஹல்கா: அப்புறம்?ஹரிஷ்பட்: அன்றிலிருந்து ஆயுதப் பயிற்சிக் கூடம் இருக்கத்தான் செய்கிறது. அதே பயிற்சியை நமது ராணுவத்துக்கு கொடுத்தோம். ஜுடோ, கராத்தே துப்பாக்கி சுடுதல் மற்றும் ராணுவ வீரர்களுக்கு தேவையான தற்காப்பு பயிற்சிகளையும் கொடுத்தோம். முப்பது அடி நீள கயிறு வைத்துக் கொண்டு எவ்வாறு ஏறுவது. சுவரேறி குதிப்பது போன்ற பயிற்சிகளை 15 நாளில் கற்றுக் கொடுத்து விடுகிறோம்.தெஹல்கா: 2002 கோத்ராவுக்குப் பிறகு இங்குள்ள ஹிந்துக்கள் ஆயுதங் களுடன் அலைகின்றனர். எப்படி அவர்களுக்கு ஆயுதம் கிடைக்கிறது.ஹரிஷ்பட்: எனக்கு சொந்தமான பட்டாசுத் தொழிற்சாலையை துப்பாக்கி தொழிற்சாலையாக மாற்றினேன். எல்லா விதமான குண்டுகளும் தயாரிக்கிறோம். டீசல் குண்டுகள். வெடி குண்டுகள். நாங்கள் தயாரித்து நாடு முழுவதும் விநியோகிக்கிறோம். நாங்கள் இரண்டு ட்ரக்குகளில் வாள்களை பஞ்சாப்பிலிருந்து வரவழைத்தோம். தாரியா கிராமத்திலிருந்து குஜராத் முழுவதும் ஆயுதங்களை விநியோகித்தோம். அந்த நேரத்தில் எங்களுக்கு மேலும் மேலும் ஆயுதங்கள் தேவையாக இருந்தது.தெஹல்கா: துப்பாக்கிகளை எங்கிருந்து பெற்றீர்கள்?ஹரிஷ்பட்: நாங்கள் பல நாடுகளிலிருந்து துப்பாக்கிகளை உத்தரப் பிரதேசம், மத்திப் பிரதேசம் வழியாக கடத்தினோம். கடத்திய துப்பாக்கிகளை மாநிலமெங்கும் விநியோகித்தோம். இங்கிருந்துதான் விநியோகித்தோம். முதன் முதலில் உங்களிடம் தான் இப்போது கூறுகிறேன். யாருக்கும் தெரியாத ரகசியம்.தெஹல்கா: ஹிந்துக்கள் ஆயுதம் ஏந்துபவர்களல்ல. சமையல் கூடத்தில் மட்டுமே கத்தியை பயன்படுத்துபவர்கள் என்றே நான் அறிந்திருக்கிறேன்.ஹரிஷ்பட்: நாங்கள் விதவிதமான ஆயுதங்களை விநியோகித்தோம். இவ்வளவு ரகங்கள் ஆயுதங்களில் உள்ளதா என மக்கள் ஆச்சரித்துடன் பார்த்தனர். எங்கள் தொழிற்சாலையில் ராக்கெட் லாஞ்சர்கள் கூட தயாரித்தோம். தெரியுமா?தெஹல்கா: ஹரிஷ்பட் நீங்கள் கான்பூரில் இருந்து ஆயுதம் வாங்கிய தாகச் சொன்ன நேரத்தில் அங்கு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததே?ஹரிஷ்பட்: ஏன் ஊரடங்கு உத்தரவு இருந்தால் என்ன? எதுவாக இருந்தாலும் நாங்கள் கொண்டு வருவோம்.தெஹல்கா: எதுவாக இருந்தாலும்... ஊரடங்கு உத்தரவு அமலில் இருந் தாலுமா?ஹரிஷ்பட்: இருந்தால் என்ன? நாங்கள் மத்தியப் பிரதேசத்தில் இருந்தும் பீகாரில் இருந்தும் வாங்குவோம்.தெஹல்கா: ஆனால் எப்படி? ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் போது எப்படி?ஹரிஷ்பட்: எல்லா ஆயுதமும் வரும்.தெஹல்கா: பக்கத்து மாநிலங்களிலிருந்தும் எல்லைக்கு அப்பாலிருந்துமா?ஹரிஷ்பட்: ஆமாம். எல்லாவற் றையும் என்னிடம் கேட்காதீர்கள்.தெஹல்கா: ஆனால் அவர்கள் நீங்கள் சொன்னது போல் செய்தார்கள்.ஹரிஷ்பட்: ஆமாம் நிச்சயமாக. இது குறித்து நீங்கள் வி.எச்.பி. பொருளாளர்ரோஹித்தை கேட்டுப்பாருங்கள். எல்லா ஏற்பாடுகளையும் அவர்தான் செய்தார்.தெஹல்கா: அவர்களுக்கு வாள்கள் மட்டும் தான். அவர் கொடுத்தனுப்பினாரா?ஹரிஷ்பட்: இல்லை. எல்லாம் தான். ஏற்கெனவே நான் உங்களிடம் சொல்லியிருக்கிறேன். ராக்கெட் லாஞ்சர்களை நாங்கள் தயாரித்தோம் என்று. அதனை நாங்கள் இந்த சூழ்நிலையை வைத்து பரிசோதித்துப் பார்த்தோம்.தெஹல்கா: நீங்கள் உண்மையி லேயே ராக்கெட் லாஞ்சரைப் பற்றித்தான் கூறுகிறீர்களா?ஹரிஷ்பட்: ஆமாம். நாங்கள் அதில் வெடி மருந்துகளை நிரப்பினோம். பின்னர் மூடி விட்டு கொளுத்தினோம். இது குறித்து விஷ்வ ஹிந்து பரிஷத் பொருளாளர் ரோஹித் உங்களிடம் பேசுவார். என்று கோத்ரா எம்.எல்.ஏ வெறியன் ஹரிஷ்பட் தனது பேட்டியை முடிக்கிறார்
Posted by mannady at 9:59 PM 0 comments

அஹ்மதாபாத் படுகொலைகளின் நகரம்
அஹ்மதாபாத் படுகொலைகளின் நகரம்நரோடா, குல்பர்க், கலுபர் மற்றும் தரியாபுர் கொலைக்கும்பல் சங்பரிவாரின் ஒவ்வொரு கண் அசைவுக்கும் ஏற்ப நடந்தது.முஸ்லிம்கள் தங்களது உயிருக்கு பாதுகாப்பு கேட்டு காவல்துறைக்கு வேண்டுகோள் விடுத்த நேரத்தில் அவர்கள் முஸ்லிம்களின் நொறுக்கப் பட்ட கொளுத்தப்பட்ட வீடுகளுக்கு பாதுகாப்பு கொடுத்துக் கொண்டிருந் தார்கள். குஜராத்தில் மிகப் பயங்கர மான படுகொலைகள் நரோடா, காவ்ன் மற்றும் நரோடா பகுதிகளில் தான் நடந்தது. உள்ளூர் பஜ்ரங்கதள் தலைவர் பாபு பஜ்ரங்கி. இவன் சதிகாரர்களில் ஒருவன். பிப்ரவரி 27 ஆம் தேதி சதிச் செயலை திட்டமிடு கிறான். வெடிகுண்டுகள் சேகரிக்கப் படுகின்றன. பாபு பஜ்ரங்கி வாட்டசாட்ட மான முரடர்களை தேர்வு செய்கிறான். வி.எச்.பி, பஜ்ரங்தள்ளைச் சேர்ந்தவர்கள் நான், நீ என்று ஆர்வத்துடன் திரண்டனர். அதன் பிறகு நடந்தது சரித்திரம் மறக்காதது.இஹ்சான் ஜாஃப்ரி என்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். அவரை எவ்வாறு துண்டு துண்டாக வெட்டினர். நெருப்பில் எரித்தனர். இது குறித்து தெஹல்கா செய்தி யாளர்கள் உண்மையை அம்பலப் படுத்தினர்.தெஹல்கா: எவ்வாறு ஜாஃப்ரியைக் கொன்றீர்கள்?சாவல்: ஓ. ஜாஃப்ரி பற்றிக் கூறுகிறீர்களா?ரொம்ப நல்லது. அவரை ஒரு கும்பல் பிடித்து வைத்துக் கொண்டிருந்தது. அவரை முதுகுப்புறமாக உதைத்து நான் தள்ளினேன். உடனே எல்லோரும் அவரை உதைத்தனர்.தெஹல்கா: நீங்கள் ஜாஃப்ரியை உதைத்தீர்களா?சாவல்: ஆமாம் அவரை உதைத்தேன்.தெஹல்கா: அப்புறம் அவர் கீழே விழுந்து விட்டாரா?சாவல்: கீழே விழவில்லை. அவர் தனது கையால் தள்ளினார். ஐந்து அல்லது ஆறு பேர் அவரைப் பிடித்துக் கொண்ட னர். ஒருவர் வாள் ஒன்றை எடுத்து ஜாஃப்ரியைக் குத்தினார். முதலில் அவரது கைகளை நான் வெட்டினேன். பின்னர் கால்களை வெட்டினேன். பின்னர் அவரது ஒவ்வொரு உறுப்பு களையும் கண்டதுண்டமாக வெட்டி னோம். பின்னர் உயிருடன் எரித்துக் கொன்றோம்.தெஹல்கா: ஜாஃப்ரியின் உடலை வெட்டிக் கொண்டிருந்த போது காவல் துறை அதிகாரி எர்டா ஜாஃப்ரியைக் காப்பாற்ற முயற்சி எடுக்கவில்லையா?சாவல்: அந்த நேரத்தில் யாரும் எதுவும் செய்யவில்லை. எர்டா தனது வாகனத்தில் மெகானி நகர் சென்று விட்டார். ஜாஃப்ரி கண்ட துண்டமாக வெட்டிக் கொல்லப்பட்டது அவருக்குத் தெரியாது. இவையெல்லாம் ஒரு மணியிலிருந்து ஒன்றரை மணிக்குள் நடந்தது.தெஹல்கா: ஜாஃப்ரியின் குடும்பத் தினர் தப்பிக்க முயற்சிக்கவேயில்லையா?சாவல்: இல்லை ஆனால் அவரது மனைவி மட்டும் காப்பாற்றப்பட்டார். அவர் ஹிந்து போல் வேடமிட்டு தப்பித்தார்.தெஹல்கா: ஆனால் அவரது மகள்கள் காப்பாற்றப்பட்டார்கள் இல்லையா?சாவல்: இல்லை. அங்கிருந்து யாரும் தப்பிக்கவேயில்லை. ஜாஃப்ரியின் மனைவியைத் தவிர. அவர் ஒரு ஹிந்து வேலைக்காரப் பெண்மணியைப் போல உடையணிந்து தப்பித்தார்.தெஹல்கா: அவர் யார் என்று நீங்கள் கண்டுபிடிக்காததால் தப்பித்தார் இல்லையா?சாவல்: இருக்கலாம். நான் அவரை இதற்கு முன்பு பார்த்ததே இல்லை.தெஹல்கா: குல்பர்க் சொஸைட்டி எவ்வளவு பெரியது. ஏராளமான மக்கள் வாழ்ந்தார்கள் இல்லையா? அவர்கள் மீண்டும் அங்கு வாழச் சென்றார்களா?சாவல்: எவரும் அங்கு செல்ல வில்லை. அது மூடப்பட்டு, சிறைபோல ஆகிவிட்டது. யாரும் அங்கே திரும்பச் செல்லவில்லை.தெஹல்கா: அந்த நேரத்தில் சில பேர் தப்பித்திருக்கிறார்களே?சாவல்: நாற்பது பேர் தப்பித்தார்கள். நாங்கள் நுழைவதற்கு முன்பு அவர்கள் ஓடிப்பிழைத்தவர்கள்.தெஹல்கா: எப்படி குல்பர்க் சொஸைட்டிக்குள் நுழைந்தீர்கள்?சாவல்: சிலர் கேஸ் சிலிண்டர் களைக் கொண்டு வந்தார்கள். சிலிண் டரை வெடிக்கச் செய்து மதில் சுவரை உடைத்தோம். பின்பு உள்ளே நுழைந் தோம்.தெஹல்கா: மதில் சுவர் மிகவும் உயரமோ?சாவல்: 15லிருந்து 20 அடி உயரம் இருக்கும்.தெஹல்கா: அது ஒன்று அல்லது இரண்டு சிலிண்டர்களை வைத்து உடைத்து விட முடிந்ததா?சாவல்: இரண்டு சிலிண்டர்களால்.தெஹல்கா: வீடுகள் கொளுத்தப் பட்டதும் அவ்வாறு தானா?சாவல்: ஆமாம்.தெஹல்கா: இதைப்போன்று தான் பாட்டியாவில் நடந்ததா?சாவல்: ஆமாம்

சில காங்கிரஸ்காரர்களும் எங்களுடன் சேர்ந்து கொண்டனர்வி.எச்.பி. தலைவர் அனில் படேல்காங்கிரஸ்காரர்கள் சிலர் எங்க ளோடு சேர்ந்து கொண்டனர்.

சில காங்கிரஸ்காரர்களும் எங்களுடன் சேர்ந்து கொண்டனர்வி.எச்.பி. தலைவர் அனில் படேல்காங்கிரஸ்காரர்கள் சிலர் எங்க ளோடு சேர்ந்து கொண்டனர். மூத்த காவல் துறை அதிகாரிகள் எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தனர் என்று அனில் படேல் கூறியுள்ளார். இக்காட்சி பதிவான தினம் ஜூன் 13, 2007அனில் பட்டேல்: சபர்கந்தாவில் தான் அதிகப்படியான எஃப்.ஐ.ஆர்.கள் போடப்பட்டன. 40லிருந்து 60 கொலை காரர்கள் இங்கு உண்டு. அவர்களுக்கு வேண்டியவைகளை நான் தான் செய்தேன். சபர்கந்தாவில் உள்ள முஸ்லிம் கிராமத்தை முழுவதும் கொளுத்தினோம். ஒருவன் கூட உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை. கோத்ரா சம்பவத்துக்குப் பிறகு மிகப் பெரிய பதிலடி எங்கள் பகுதியிலிருந்து தான் கிடைத்தது.தெஹல்கா: இதில் விஸ்வ ஹிந்து பரிஷத்காரர்கள் மட்டும் தான் ஈடுபட்டார் களா?அனில் பட்டேல்: எல்லா ஹிந்து இயக்கங்களும் ஏன் காங்கிரஸ்காரர்கள் கூட ஊருக்கு நான்கைந்து பேர் எங்களோடு சேர்ந்து கொண்டார்கள். காங்கிரஸ் எம்.எல்.ஏ ஹரிபாய் படேல் முஸ்லிம்களை காப்பாற்ற முயன்றார். இந்த முஸ்லிம்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் பார்த்தீர்களா? என அவர்களைக் குறித்து விளக்கிய பிறகு அவர்களை விட்டுவிட்டு ஹரிபாய் படேல் சென்று விட்டார். கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் மீண்டும் மீண்டும் டி.வி.யில் காட்டப் பட்டது. டான்சுராவில் உள்ள பள்ளி வாசல் தகர்க்கப்பட்டது. அங்கிருந்த ஒரே பள்ளிவாசல் அதுதான்.தெஹல்கா: அங்கிருந்த மவ்லவி உயிருடன் இல்லை. அவர் எரிக்கப் பட்டாரா?பட்டேல்: ஓடும்போதுதான் ஒருவர் அவர் தலையை வெட்டிவிட்டார்.தெஹல்கா: வாளால்?பட்டேல்: இல்லை. கோடரியால்.தெஹல்கா: இது (கோத்ரா) உங்களுக்கு ஒரு கௌரவப் பிரச்சினை இல்லையா?படேல்: நான் 500 முஸ்லிம் களையாவது கொல்லாமல் நம் வேலை முடியாது என்று முடிவெடுத்தேன். உயிருடன் அவர்களை கொளுத்த முடிவு செய்தேன்.தெஹல்கா: குழந்தை களைக் கூடவா?பட்டேல்: கதவை வெளிப் புறமாக பூட்டிவிட்டு தீவைத்து ஒவ்வொரு முழு குடும்பத்தையும் கொன்றேன். ஒருவர் கூட தப்பித்திருக்க முடியாது.தெஹல்கா: டான்சுராவில் வீடுகள் கொளுத்தப்பட்டுள்ளனவா?பட்டேல்: 126 முஸ்லிம் வீடுகள் அழிக்கப்பட்டன. மொத்த மாவட்டத்தி லேயே அவர்களுடைய எல்லாவற்றை யும் அழித்தோம். ஒரேயொரு கிராமத் தைச் சேர்ந்தவர்கள் சொத்துக்கள் இன்னும் 75 சதவீதம் பேர் திரும்பவே முடியவில்லை.தெஹல்கா: முழு மாவட்டமும் உங்கள் பொறுப்புதானே?பட்டேல்: நான்கு தாலுகாக்கள் தான் எனது பொறுப்பு.தெஹல்கா: எத்தனை முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.பட்டேல்: 30க்கும் மேல் பயாதில் மட்டும் 60 டிரைவர்கள் இன்னும் காணவில்லை.தெஹல்கா: ட்ரக் டிரைவர்கள் யார்?பட்டேல்: ஆம். மும்பையைச் சேர்ந்தவர்கள்.தெஹல்கா: பிரவிண் தொகாடியா உங்களோடு பேசினாரா?பட்டேல்: பேசினார். கவனமாக இருக்கும்படி கேட்டுக் கொண்டார்சிலர் எங்க ளோடு சேர்ந்து கொண்டனர். மூத்த காவல் துறை அதிகாரிகள் எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தனர் என்று அனில் படேல் கூறியுள்ளார். இக்காட்சி பதிவான தினம் ஜூன் 13, 2007அனில் பட்டேல்: சபர்கந்தாவில் தான் அதிகப்படியான எஃப்.ஐ.ஆர்.கள் போடப்பட்டன. 40லிருந்து 60 கொலை காரர்கள் இங்கு உண்டு. அவர்களுக்கு வேண்டியவைகளை நான் தான் செய்தேன். சபர்கந்தாவில் உள்ள முஸ்லிம் கிராமத்தை முழுவதும் கொளுத்தினோம். ஒருவன் கூட உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை. கோத்ரா சம்பவத்துக்குப் பிறகு மிகப் பெரிய பதிலடி எங்கள் பகுதியிலிருந்து தான் கிடைத்தது.தெஹல்கா: இதில் விஸ்வ ஹிந்து பரிஷத்காரர்கள் மட்டும் தான் ஈடுபட்டார் களா?அனில் பட்டேல்: எல்லா ஹிந்து இயக்கங்களும் ஏன் காங்கிரஸ்காரர்கள் கூட ஊருக்கு நான்கைந்து பேர் எங்களோடு சேர்ந்து கொண்டார்கள். காங்கிரஸ் எம்.எல்.ஏ ஹரிபாய் படேல் முஸ்லிம்களை காப்பாற்ற முயன்றார். இந்த முஸ்லிம்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் பார்த்தீர்களா? என அவர்களைக் குறித்து விளக்கிய பிறகு அவர்களை விட்டுவிட்டு ஹரிபாய் படேல் சென்று விட்டார். கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் மீண்டும் மீண்டும் டி.வி.யில் காட்டப் பட்டது. டான்சுராவில் உள்ள பள்ளி வாசல் தகர்க்கப்பட்டது. அங்கிருந்த ஒரே பள்ளிவாசல் அதுதான்.தெஹல்கா: அங்கிருந்த மவ்லவி உயிருடன் இல்லை. அவர் எரிக்கப் பட்டாரா?பட்டேல்: ஓடும்போதுதான் ஒருவர் அவர் தலையை வெட்டிவிட்டார்.தெஹல்கா: வாளால்?பட்டேல்: இல்லை. கோடரியால்.தெஹல்கா: இது (கோத்ரா) உங்களுக்கு ஒரு கௌரவப் பிரச்சினை இல்லையா?படேல்: நான் 500 முஸ்லிம் களையாவது கொல்லாமல் நம் வேலை முடியாது என்று முடிவெடுத்தேன். உயிருடன் அவர்களை கொளுத்த முடிவு செய்தேன்.தெஹல்கா: குழந்தை களைக் கூடவா?பட்டேல்: கதவை வெளிப் புறமாக பூட்டிவிட்டு தீவைத்து ஒவ்வொரு முழு குடும்பத்தையும் கொன்றேன். ஒருவர் கூட தப்பித்திருக்க முடியாது.தெஹல்கா: டான்சுராவில் வீடுகள் கொளுத்தப்பட்டுள்ளனவா?பட்டேல்: 126 முஸ்லிம் வீடுகள் அழிக்கப்பட்டன. மொத்த மாவட்டத்தி லேயே அவர்களுடைய எல்லாவற்றை யும் அழித்தோம். ஒரேயொரு கிராமத் தைச் சேர்ந்தவர்கள் சொத்துக்கள் இன்னும் 75 சதவீதம் பேர் திரும்பவே முடியவில்லை.தெஹல்கா: முழு மாவட்டமும் உங்கள் பொறுப்புதானே?பட்டேல்: நான்கு தாலுகாக்கள் தான் எனது பொறுப்பு.தெஹல்கா: எத்தனை முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.பட்டேல்: 30க்கும் மேல் பயாதில் மட்டும் 60 டிரைவர்கள் இன்னும் காணவில்லை.தெஹல்கா: ட்ரக் டிரைவர்கள் யார்?பட்டேல்: ஆம். மும்பையைச் சேர்ந்தவர்கள்.தெஹல்கா: பிரவிண் தொகாடியா உங்களோடு பேசினாரா?பட்டேல்: பேசினார். கவனமாக இருக்கும்படி கேட்டுக் கொண்டார்
Posted by mannady at 2:31 PM 0 comments

சதியின் கால அட்டவணை
சதியின் கால அட்டவணை2002ல் கோத்ராவிற்கு நரேந்திர மோடி வந்து பார்வையிட்டபின் சாதாரண விபத்து சதியாக பரப்பப்படுகிறது.அஹ்மதாபாத், வடோதரா மற்றும் சபர்கந்தா போன்ற பகுதிகளில் உள்ள முஸ்லிம் பகுதிகளை சங்பரிவாரங்கள் சூழ்ந்தனர். நரேந்திர மோடியின் முதல் சமிக்ஞைகளுக்குப் பிறகு திட்டங்கள் தயாராயின. கலவரங்கள் விளைவிக்கப் போகும் குற்றவாளிகளை எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்து முன்னணி வழக்கறிஞர்களும், மூத்த காவல்துறை அதிகாரிகளும் ரகசியமாகக் கூடிப் பேசினர். காவிப் பிரமுகர்கள் இவ்வாறு கூறினர். 'மோடி' உங்களுக்கு ஆதரவாக பின்னணியில் இருப்பார் என தைரியம் கூறினார்.இவையெல்லாம் தானாகவே ஏற்பட்டதல்ல; இது திட்டமிடப்பட்டது. இது மிகப்பெரிய இனப்படுகொலை.
Posted by mannady at 2:31 PM 0 comments

9 மாத கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து சிசுவை
9 மாத கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து சிசுவை வெளியே எடுத்தேன்...லி பாபு பஜ்ரங்கிதெஹல்கா: பாட்டியா சம்பவத்தில் மோடி உங்களுக்கு ஆதரவாக இருந் தாரா?பஜ்ரங்கி: ஆமாம். எங்களுக்கு ஆதரவாக பக்கபலமாக இருந்தார். எல்லாமே மோடி கண்ட்ரோலியே இருந்தது. எங்களுக்கு உரிமைகள் தந்தார்.காவல்துறையினரிடம் வித்தியாசமாக கட்டளையை பிறப்பித்திருக்க வேண்டும். அதனால் அவர்களின் (சங்பரிவாரின்) முழுக் கட்டுப்பாட்டில் குஜராத் வந்தது.தெஹல்கா: அவர்களே கட்டுப் பாட்டை வைத்துக் கொண்டார்களா?பஜ்ரங்கி: அவர்களே நகரம் முழுவதையும், குஜராத் முழுவதையும் இரண்டு நாள் கட்டுப்பாட்டில் வைத்திருந் தார்கள். இரண்டு நாள் தான் கட்டுப் பாட்டில் வைத்திருக்க முடிந்தது. அதற்கிடையில் டெல்லியிலிருந்து அழுத்தங்கள் வர ஆரம்பித்தன. சோனியாலிவோனியா விடமிருந்து புகார்கள் வர ஆரம்பித்து விட்டன.இந்த வெறியன் தான் கவுசர் பானு என்ற 9 மாத கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து சிசுவை வெளியே எடுத்துவிட்டு தாயையும், சேயையும் கொளுத்திய கொடுமையை பெருமையாகக் கூறிய அவன் முஸ்லிம்களைக் கொன்றதனால் நான் ராணா பிரதாப் சிங்கைப் போல உணர்ந்தேன் என்றான்.காவல்துறையினர் எங்களுக்கு தோட்டாக்கள் உள்பட எல்லாம் வழங்கினார்கள் என்று கூறிய பாபு பஜ்ரங்கி போன்ற பயங்கரவாதிகள் மற்றும் காக்கி உடையில் நடமாடிய காவி பயங்கரவாதிகளின் கோரச் செயல்களைக் கண்டு உலகம் வேதனையில் ஆழ்ந்தது. இந்த மாமிச வெறியர்களின் ரத்த வேட்டையைக் குறித்தும், முகமூடி கிழித்தெறியப்பட்ட கயவர்களின் கயமைத் தனம் குறித்தும் முழுவதும் விவரிக்கப் புகுந்தால் இந்த நாடும், இந்த ஏடும் தாங்காது.தெஹல்கா அம்பலப்படுத்திய இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படு கொலையில் கயவர்களின் ஒப்புதல் வாக்குமூலங்களை தமுமுக இணைய தளத்தில் வீடியோவாக காண்க
Posted by mannady at 2:31 PM 0 comments
Wednesday, October 24, 2007

இந்தியாவிற்கு அதிக வருவாயைத் தருவது யார்?
இந்தியாவிற்கு அதிக வருவாயைத் தருவது யார்?அந்நிய செலாவணியை அதிகம் ஈட்டுவதில் சீனா, மெக்சிகோ ஆகிய முன்னணி நாடுகளை பின்னுக்குத்தள்ளி, நம்நாடு முதன்மை பெற்றுள்ளது.உலக வங்கி அண்மையில் வெளியிட்டுள்ள புள்ளி விவரம் இதைத் தெரிவிக்கிறது.வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் மூலம், இந்தியாவுக்கு ஓர் ஆண்டுக்குக்கு 25.7 பில்லியன் டாலர் வருமானம் கிடைக்கிறது. இதன் இந்திய மதிப்பு சுமார் ஒரு லட்சத்து இருபத்தெட்டாயிரத்து ஐநூறு கோடி ரூபாய் ஆகும். உலகில் அதிக ஜனத்தொகை கொண்ட சீனாவுக்கு 22.5 பில்லியன் டாலரும், மெக்சிகோவுக்கு 24.7 பில்லியன் டாலரும் அந்நிய செலாவணியாகக் கிடைக்கின்றன.இந்தியாவிற்கு வெளிநாட்டில் பணிபுரிபவர் களின் மூலம் கிடைக்கும் அந்நிய செலாவணி மேற்கண்ட முன்னணி நாடுகளையும் முந்தி விட்டது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் மூலம் ஈட்டுகின்ற வருவாய் நாட்டின் நட்டுமொத்த ராணுவ செலவினைக்கு நிகரானதாகும்.தேசிய நிதிநிலை அறிக்கையில், கல்விக்காக ஒதுக்கப்படும் தொகையை விட, வெளிநாடுவாழ் இந்தியர்கள் மூலம் இந்தியா ஈட்டும் தொகை 5 மடங்கு அதிகமாகும்.வருமான வரி, மற்றும் சொத்துவரி மூலம் நாட்டுக்கு கிடைக்கும் வருவாயை விடவும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மூலம் கிடைக்கும் வருவாய் அதிகமாகும்.வெளிநாடுகள் நம் நாட்டில் செய்துள்ள நேரடி முதலீடுகளை விடவும் இத்தொகை மூன்று மடங்கு அதிகம் என்பது வியப்புக்கும் மகிழ்ச்சிக்கும் உரிய செய்தியாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 3 விழுக்காட்டிற்கு இது சமமானதாகும்.இந்தியாவிற்குக் கிடைக்கும் அந்நிய செலா வணியை அளிப்பதில் கேரளமும், தமிழகமும் முன்னிலை வகிக்கின்றன. கர்நாடகா, குஜராத், ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப் ஆகியவை முறையே அடுத்தடுத்த இடத்தை பிடிக்கின்றன. திருவனந்தபுரத்தில் இயங்கி வரும் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கல்வி மையம் நடத்திய ஆய்வில் கேரளத்தில் 25 விழுக்காடு ஊர்களில், குடும்பத்திற்கு குறைந்த பட்சம் நால்வர் வெளிநாட்டில் பணிபுரிவது தெரிய வந்துள்ளது.இந்தியாவிலிருந்து சுமார் 10 மில்லியன் பேரும், மெக்சிகோ மற்றும் ரஷ்யாவிலிருந்து சுமார் 11.5 மில்லியன் பேரும் வெளிநாட்டில் பணிபுரிவதாக உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.அந்நியச் செலாவணியின் பெரும் பகுதி நிதியை அனுப்புபவர்கள், மருத்துவ, பொறி யியல், கணிணித்துறை ஆகியவற்றை சேர்ந்தவர்கள் அல்ல, சாதாரணக் கூலி வேலைக்காகச் சென்றவர்கள் என்பது ஆச்சர்யமான உண்மையாகும்.மேற்கண்ட தகவல்கள் உலக வங்கியால் வெளியிட்டப்பட்டவை ஆகும். சொந்தங் களைப் பிரிந்து, பிறந்த மண்ணைத் துறந்து, வெளிநாடுகளில் கடும் உடலுழைப்பை மேற் கொள்பவர்கள் தான் இந்தியாவின் ராணுவ பட்ஜெட்டையே ஈடு செய்கின்றனர். இவற்றில் மிகப்பெரும்பான்மையினர் முஸ்லிம்கள் என்பதை சொல்லத் தேவையில்லை. இத்தகைய மிகப்பெரிய உதவியை சொந்த நாட்டிற்குச் செய்து கொண்டிருப்பவர்களின் நிலை இங்கு எப்படி உள்ளது?வருவாய் தேடி, பாலைவனம் நோக்கி சிறகடித்த, விசாப் பறவைகளின் நிலை, பரிதாபத்திற்குரியதாக இருக்கிறது. சிறப்புச் சலுகைகள் தரப்பட வேண்டிய அவர்களுக்கு, உரிய உரிமைகள் கூட மறுக்கப்படுவதை அறிந்தால் மனம் கசக்கும்.வாக்குரிமை உள்ளிட்ட பல்வேறு உரிமைகள் அவர்களுக்கு மறுக்கப்படுகிறது. நாடுதோறும் சொந்த பந்தங்களைப் பிரிந்து தூரதேசங்களில் உழைப்பவர்களின் குடும்பங் களில் பிரச்சினை என்றால், அவர்களை அலைக்கழிப்பது, பணம் பிடுங்குவது, போன்ற மனசாட்சியற்ற செயல்களும் இங்கு அரங்கேறுவது நம் கவனத்திற்கு வருகின்றன. நாட்டிற்கு வருமானம் ஈட்டிக் கொடுப்பவர் களின் பிள்ளைகளுக்கு கல்வி நிறுவனங்களில் இடம் கிடைக்க மற்றவர்களை விட அதிகக் கட்டணம் கட்ட வேண்டியுள்ளது.இந்தக் குறைபாடுகள் களையப்படுவது தான் நாட்டின் நன்றியுணர்ச்சிக்கு அடையாளமாக இருக்கும்
Posted by mannady at 3:00 PM 0 comments

நவீன நீரோ மன்னன் மோடி பேட்டியிலிருந்து ஓட்டம் (வீடியோ)
நவீன நீரோ மன்னன் மோடி பேட்டியிலிருந்து ஓட்டம்ஹபீபா பாலன்குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சி.என்.என்லிஐ.பி.என் தொலைக்காட்சியில் பிரபல இதழியலாளர் கரண்தாப்பரிடம் பேட்டியளிக்க வந்தபோது கோத்ரா முஸ்லிம்கள் கோரக் கொலைகள் பற்றியும், அப்பாவி முஸ்லிம்கள், பெண்கள், குழந்தைகள் எரித்துக் கொல்லப்பட்ட கொடூரங்கள் குறித்தும் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் ஓடினார்.நவீன நீரோ மன்னன் என்று உங்களை உச்சநீதிமன்றம் கூறியிருக் கிறதே போன்ற பல்வேறு கேள்வி கணைகளுக்கு மோடி திக்கினார் திணறினார். மூன்று நிமிடத்துக்குள் பேட்டியை முடித்துக் கொண்டு ஓடி ஒளிந்து கொண்டார் மோடி பேட்டி முடித்து விட்டது. மோடி ராஜ்யம் இந்த சட்டமன்றத் தேர்தலுடன் முடிந்து விடுமா?மோடியின் பேட்டி...கரண்தாப்பர்: நீங்கள் இனப்படுகொலைகளை நிகழ்த்தியதற்காக வெறுக்கப்படுகிறீர்கள். முஸ்லிம்களுக்கு எதிராக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறீர்கள் இதை ஒரு இமேஜ் பிரச்சினையாக படவில்லையா?நரேந்திர மோடி: இரண்டு அல்லது மூன்று நபர்கள் இந்த பாணியில் பேசிக்கொள்கிறார்கள். கடவுள் அவர்களை ஆசிர்வதிக்கட்டும்.கரண்தாப்பர்: இது உங்களுக்கு எதிரான இரண்டு அல்லது மூன்று நபர்களின் சதி என்று சொல்கிறீர்களா?நரேந்திர மோடி: நான் அதைப் பற்றி பேசவில்லை?கரண்தாப்பர்: ஆனால் வெறும் இரண்டு அல்லது மூன்று பேர் பற்றிய விஷயம் என்று கூறுகிறீர் களா?நரேந்திர மோடி: இது எனக்கு வந்த தகவல். இது மக்களின் குரல்.கரண்தாப்பர்: 2003 செப்டம்பரில் உச்சநீதிமன்றம் 'குஜராத் அரசின் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாகக் கூறியது. பெண்கள், குழந்தைகள் எரித்துக் கொல்லப்பட்டது குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி செப்டம்பர் 2004ல் 'நவீன நீரோ மன்னன் போல நீங்கள் நடந்து கொண்டதாக கூறினார். பிரச்சினை உங்களிடம் தான் இருப்பதாக உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.நரேந்திர மோடி: கரண், உங்களிடம் நான் சிறிய வேண்டுகோள் விடுக்கிறேன். தயவு செய்து உச்சநீதிமன்ற தீர்ப்பு விஷயத்திற்குப் போகவேண்டாம். அதில் என்னைப் பற்றி என்ன எழுதியிருந்தாலும் எனக்கு சந்தோஷமே.கரண்தாப்பர்: அதில் உங்களைப் பற்றி நல்லவை எதுவும் எழுதப்படவில்லை. உச்சநீதிமன்றத்தின் கருத்து இது.நரேந்திர மோடி: இதுதான் தீர்ப்பு என்றால் அதற்கு பதில் கூறுவதில் எனக்கு சந்தோஷமே.கரண்தாப்பர்: தலைமை நீதிபதியின் விமரிசனம் ஒரு 'பெரிய விஷயமே இல்லை என்று சொல்கிறீர்களா?நரேந்திர மோடி: தயவு செய்து நீதிமன்ற விஷயத்தை விட்டு விடுங்கள். அந்த வாசகங்களையும், உதாரணங்களை யும் மக்கள் உணர்ந்து கொள்வார்கள்.கரண்தாப்பர்: ஒ.கே. இது தலைமை நீதிபதியின் வெளிப்படையான கருத்து இல்லையா? 4,600 வழக்குகளில் 2,100 வழக்குகளை மறுவிசாரணை செய்ய உச்சநீதிமன்றம் கூறுகிறது. குஜராத்தில் நீதி கிடைக்காது என்றே மக்கள் நம்புகிறார்கள்.நரேந்திர மோடி: .....?கரண்தாப்பர்: இந்தியாடுடே உங்களை சிறந்த முதல்வர் என்று கூறினாலும் ராஜிவ்காந்தி அறக்கட்டளை குஜராத் சிறந்த நிர்வாகத்துடன் செயல்படுகிறது என்று கூறினாலும் வேண்டுமென்றே முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படுகிறீர்கள் என்றே கூறுகிறார்கள். ஏன் இதை உங்களது இமேஜ் பிரச்சினையாக எடுத்துக் கொள்ளவில்லை.நரேந்திர மோடி: நான் குஜராத்துக் காகவே என் வாழ்வை அர்ப்பணித்து விட்டேன் (அடங்கப்பா) போதும் ப்ளீஷ் கரண்.கரண்தாப்பர்: ஆனால் மோடி நான் ஒன்றும் தவறாக பேசி விடவில்லை. உங்கள் இமைஜை சரி செய்ய முயலாதது ஏன் என்பதுதான் என் கேள்வி?நரேந்திர மோடி: அதற்கு இது நேரமல்ல என்று மழுப்பிய மோடி தண்ணீர் வேண்டும் என்று கேட்டு மிடறு விழுங்கினார்.குஜராத் இனப்படுகொலைகள் குறித்த கேள்வியால் திணறிய மோடி, உச்சநீதி மன்றத்தின் கருத்து குறித்த கேள்விக்கு ஆத்திரம் அடைந்தார். ஆத்திரமும் அவமானமும் ஒருசேர மோடி கோழை போல ஓடினார்