Saturday, July 28, 2007

பள்ளி வாசலை இடித்த ராணுவத்தினர் புதுடெல்லியில்

பள்ளி வாசலை இடித்த ராணுவத்தினர் புதுடெல்லியில் நடந்த அக்கிரமம்
சர்ஜுன்
இந்திய ராணுவ உயர் அதிகாரி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட ராணுவத்தினர் 200 ஆண்டுகால பழமை வாய்ந்த பள்ளிவாசலை இடித்து சேதப்படுத்தினர்.
டெல்லி அருகே தேசிய நெடுஞ் சாலை 8, வசந்த ரங்கே மகன் மோண்ட் மண்ட் பகுதியில் உள்ள பள்ளிவாசலின் மீது இந்த கொடூர தாக்குதல் நடத்தப் பட்டது. இத்தகவலை பள்ளிவாசலின் இமாம் முஹம்மது ஜாஃபர் தெரிவித்தார். ராணுவ உயர் அதிகாரி மீனா தத்தா தலைமையில் தடாலடியாக பள்ளிவாசலில் புகுந்த ராணுவத்தினர் பள்ளிவாசல் நிலம் ராணுவத்துக்கு சொந்தமானது. 24 மணி நேரத்தில் இந்த பள்ளிவாசலை விட்டு காலி செய்ய வேண்டும் என்று கூறியதோடு, வெற்று பேப்பர் ஒன்றில் மிரட்டி கையெழுத்தி வாங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார். அதோடு இமாமின் மனைவியையும் மிரட்டி கையெழுத்து வாங்க ராணுவத்தினர் முயற்சித்தனர். ஆனால் இமாம் முஹம்மது ஜாஃபரின் மனைவி வெற்றுப் பேப்பர்ரில் கையெழுத்திட மறுத்தார். அவர்கள் மிரட்டிய போது தனக்கு எழுத வாசிக்கத் தெரியாது எனக் கெஞ்சிய போதும் அவர்கள் மிரட்டியுள்ளனர். பள்ளிவாசலின் ஒரு பகுதி ராணுவத்தினரால் இடிக்கப் பட்டது.

சம்பவத்தைக் கண்ட வழிப்போக்கர் ஒருவர் இச்சம்பவம் குறித்து காவல் துறைக்கு தொலைபேசியில் தகவலை தெரிவித்தார்.
காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அது மட்டுமின்றி காவல்துறைக்கு புகார் கொடுப்பதால் தங்களை ஒன்றும் செய்ய முடியாது என மறுநாளோ, ராணுவ அதிகாரி ஒரு படையுடன் வந்து இமாமையும் மற்றவரையும் மிரட்டினார்கள்.
ராணுவ அதிகாரியுடன் வந்த கும்பல் சென்ற பிறகு, அந்தப் பள்ளிவாசலின் இமாம் ஜாஃபர் டெல்லி கண்டோன் மென்ட் காவல்துறையில் தனது புகாரை பதிவு செய்தார். அதோடு டெல்லி வக்ஃபு வாரியத்திற்கும் தகவல் கொடுத்தார். ராணுவத்திற்கு சொந்தமான நிலத்தில் பள்ளிவாசலை கட்டியிருப்பதாக ராணுவத்துறை தெரிவித்துள்ளது.
டெல்லி வக்ஃபு வாரியத் தலைவர் சவுத்ரி மதீன் அஹ்மத் கூறும்போது, பசந்த் நகர் வலி மஸ்ஜித் மற்றும் மஸ்ஜிதே அல் ஹபீபியா இரண்டும் வக்ஃபு வாரியத்துக்கு சொந்தமானது, அதற்கு ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாக தெரிவித்தார்.
இமாம் ஜாஃபரை வக்ஃபு வாரியம் தான் நியமித்தது. அவரை ராணுவம் தாக்கியது சட்ட விரோதமான செயல் என எச்சரித்தார்.
பள்ளிவாசல் இடிக்கப்பட்ட தகவல் தெரிந்ததும் ஏராளமான முஸ்லிம்கள் திரண்டு போராட்டத்தில் குதித்தனர். பள்ளிவாசலை இடித்த ராணுவத் துறையின் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் குதித்தனர்.
டெல்லி வக்ஃபு வாரியமும் டெல்லி மாநில சிறுபான்மை ஆணையமும் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மத்திய ராணுவத்துறை அமைச்சருக்கும் தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளனர். இதன் பிரதியை தேசிய சிறுபான்மை ஆணையத்திற்கும் அவர்கள் எழுதியுள்ளனர்.
கர்னல் தத்தா ஏதேச்சதிகாரம் குறித்து மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என துணை காவல்துறை ஆணையர் மற்றும் துணை ஆளுநர் ஜிதேந்தர் கன்னா, டெல்லி முதலமைச்சர் ஷீலா தீட்சித் ஆகியோர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய சிறுபான்மை ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.
ராணுவம் தவறிழைத்தது குறித்து உண்மைத் தகவல் வெளியிடப் படவேண்டும் என ராணுவ உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். டெல்லி ஜும்மா மஸ்ஜித் இமாம் அஹ்மத் புஹாரி மஸ்ஜித் அல் ஹபீபியா பள்ளிவாசலில் வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டார். இந்த நிலம் வக்ஃபு வாரியத்துக்கு சொந்தமானது இதை ராணுவம் சொந்தம் கொண்டாடுவது அடிப்படையற்றது என புஹாரி தெரிவித்தார். அகில இந்திய மில்லி கவுன்சிலின் பொதுச் செயலாளர் ஹன்னான் சந்தன் மஸ்ஜிதே ஹபீபியா பள்ளி வாசல் தகர்க்கப்பட்டதற்கு சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.
ராணுவத்தினரின் இந்த செயல் டெல்லி வாழ் முஸ்லிம்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள

No comments: